வீட்டுக் கஷ்ட, நஷ்டம் தெரிஞ்ச மனசாட்சி உள்ள ரோபோ..!
குடும்பத்தில் நிலவும் மகிழ்ச்சி, துக்க சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு செயல்படும் திறன் படைத்த ரோபோக்களை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். உலக அளவில் இன்று முன்னணியில் இருக்கும் ஆராய்ச்சிகளில் நானோ தொழில்நுட்பத்துக்கு அடுத்த படியாக ரோபோ ஆராய்ச்சியை குறிப்பிடலாம். இந்த ஆராய்ச்சியில் ஜப்பான் முன்னணியில் இருக்கிறது. அந்நாட்டின் ஹோண்டா நிறுவனம் தயாரித்துள்ள அசிமோவ் ரோபோ உலகப் புகழ்பெற்றதாகும். இந்நிலையில் உயிருள்ள ஜீவன் போல சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் ‘ஐசாய் 1’ என்ற ரோபோவை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது விஞ்ஞானக் கற்பனை அல்ல.. நிஜம் என்கிறார் இந்த ரோபாவை உருவாக்கிய விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் டீகோ கார்சியா. மனிதர்களுக்கு ஒரு துணையாகவும், பொழுதுபோக்கு அம்சமாகவும் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் உயிருள்ள நபர் போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையிலும், முடிவுகளை தாமாக சுதந்திரமாக எடுக்கும் வகையிலும் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. 25 செமீ உயரமும், ஒன்றரை கிலோ எடையும் கொண்ட இந்த ரோபோவுக்கு மனசாட்சியும் இருப்பதாக கார்சியா தெரிவித்துள்ளார்.
வீட்டில் கிடைக்கும் அனுபவத்திலிருந்து தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தது இந்த ரோபோ. தொழிற்சாலையிலிருந்து சந்தைக்கு வரும் சமயத்தில் ஒரே மாதிரியாக இருக்கும் இந்த ரோபோக்கள் வீடுகளில் உபயோகப்படுத்தும் போது, இரண்டே மாதத்தில் அந்தந்த வீட்டு சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளும் என்கிறார் இதனை வடிவமைத்த கார்சியா.
கருங்கடலுக்கு அடியில் மெகா ஆறு கண்டுபிடிப்பு
லண்டன் :கிழக்கு ஐரோப்பாவையும் மேற்கு ஆசியாவையும் பிரிக்கும் வகையில் ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகளை ஒட்டி அமைந்துள்ளது கருங்கடல். இதைப் பற்றி லண்டன் லீட்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கருங்கடலுக்கு அடியில் அதிக வேகத்தில் ஆறு ஓடுவதை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். இதன் ஆழம் 115 அடி என்றும் தெரியவந்துள்ளது. பூமியின் மேற்பரப்பில் இது இருந்திருந்தால், உலகின் 6&வது பெரிய ஆறு என்ற பெருமையை பெற்றிருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
தேம்ஸ் நதியில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை விட 350 மடங்கு அதிகமாக இந்த நீரோட்டத்தில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர். இந்த ஆறு ஓடும் மிக பிரமாண்டமாக பரப்பில் ஏகப்பட்ட மேடு, பள்ளங்கள் இருப்பதால் நீர்வீழ்ச்சிகள் இருப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
| உலகில் அடுத்த குள்ள மனிதர்! |
ஒரு மனிதன் குள்ளமாக இருந்தால் அவனை நாம் கேலி செய்வோம் ஆனால் அந்த குள்ளம்தான் உலகளவில் பேசப்படுகின்றது. அதாவது உலகத்தில் குள்ளமான மனிதர் , உயரமான மனிதர், நிறை கூடிய மனிதர் என்று பல விதத்தில் மனிதனை உலகத்திற்கு எடுத்து காட்டுகின்றனர்.
சிலர் தனது உடல் அமைப்பை வைத்து கவலைப் படுவது உண்டு. ஆனால் அந்த உடல் அமைப்பே உலகத்தையை வியக்க வைக்கின்றது என்பது உண்மை.
அந்த வகையில் உலகில் குள்ளமான மனிதராக இருந்த பிங்பிங் கடந்த மார்ச் மாதம் இறந்து விட்டார். இதையடுத்து உலகில் குள்ளமான மனிதர் என்ற இடத்தை சீனாவை சேர்ந்த ஹவுங் கைகான் பிடித்துள்ளார்.
அவரது வயது 40. இவருடைய உயரம் 76 சென்டி மீட்டர். பிங்பிங்கை விட இவர் 1.4 சென்டி மீட்டர் அதிக உயரமாக இருக்கிறார். இவர் பிறந்து 1 மாதம் வரை உடல வளர்ச்சி இருந்து உள்ளது. 1 மாதத்துக்கு பிறகு உடல் வளர்ச்சி முற்றிலும் நின்று விட்டது. இப்போது அவர் ஒரு வயது குழந்தைகள் அணியும் ஆடையையே அணிகிறார். தனது தாயாருடன் வசித்து வரும் இவர் மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.
No comments:
Post a Comment