Monday, August 2, 2010
ஆய்வு உண்மை
தட்ப வெப்ப மாறுதல் காரணமாக 12 ஆண்டுகளில் பூமி நீரில் மூழ்கும் அபாயம்
பருவநிலை மாற்றம் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் தட்ப வெப்ப நிலையில் மாறுதல் ஏற்பட்டு வருகிறது. பூமியில் ஏற்படும் மாசுகாரணமாக விண்வெளியில் கார்பனின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் வடக்கு மற்றும் தென் துருவங்களில் கடல் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் வழக்கத்தை விட அதிக அளவில் உருகுகின்றன. இதனால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் 12 ஆண்டுகளில் பூமியின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். இந்த தகவலை தாய்லாந்து சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே கார்பன் உற்பத்தியை குறைத்து பூமியை காப்பாற்றும் பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
வான்வெளியில் பூமி போல 140 பங்காளிகள்
லண்டன் : அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ 4 ஆண்டுகளுக்கு முன்பு செலுத்திய விண்கலம் ‘கெப்ளர்’. ஆய்வுப் பணியை தொடங்கியதில் இருந்து கோடிக்கணக்கான படங்களை பூமிக்கு அது அனுப்பியது. விண்வெளியில் ஆற்றல் மிக்கதாக 706 புதிய கோள்கள், 5 புதிய சூரிய மண்டலங்கள் இருப்பது அந்த போட்டோக்களில் இருந்து தெரியவந்தது. கெப்ளர் அனுப்பிய 400 போட்டோக்களை ஆராய்ச்சி செய்ததிலேயே இத்தகைய அரிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன. கெப்ளர் மூலம் கிடைக்கப்பெற்றதில் 1.5 லட்சம் படங்களுக்கு குறைந்தபட்சம் 5 படங்கள் உருப்படியான தகவல்களை தருகிறது. விண்வெளியில் புதிய கோள்கள் இருப்பது தொடர்ந்து தெரியவருகின்றன என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்.
விண்வெளியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கோள்களில் சில பூமியை ஒத்திருக்கின்றன. புதியவற்றில் சுமார் 140 கோள்களில் பூமி போலவே பாறைகள், நீர் இருப்பதாக தெரிகிறது. மனிதன் வாழும் சூழ்நிலை இந்த கோள்களில் நிலவுகிறது என்றும் தெரிவித்துள்ளனர். இந்த கோள்களில் நிலவும் தட்பவெப்பம் உள்ளிட்டவை தொடர்பாக விரிவான ஆராய்ச்சி நடத்த உள்ளதாகவும் கூறினர்.
கோழியில் இருந்துதான் முட்டை வந்ததாம் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
முட்டையில் இருந்து கோழி வந்ததா? அல்லது கோழியில் இருந்து முட்டை வந்ததா? என்ற கேள்விக்கு நீண்ட நாட்களாக பதில் அளிக்க முடியாமல் இருந்த நிலையில், தற்போது கோழியில் இருந்துதான் முட்டை வந்ததாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்டு, வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றி ஆய்வு நடத்தினார்கள். முட்டையின் செல்களை சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்ததில் முட்டையின் செல்கள் வோக்லெடின்-17 என்ற புரோட்டின் மூலம் உருவாகி இருந்தது. இந்த வோக்லெடின்-17 செல் கோழியின் உடலில் இருப்பதாகும். அதுதான் முட்டையாக மாறி இருக்கிறது. வோக்லெடின்-17 புரோட்டின், கிறிஸ்டல், நியூகிளீசாக மாறி தானாக வளர்ச்சி பெற்று முட்டை செல்களாக மாறுவது இதன் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது. எனவே கோழியில் இருந்துதான் முட்டை வந்துள்ளது என்று அடித்துக்கூறுகின்றனர் அந்த விஞ்ஞானிகள்!
வால் நட்சத்திர தோற்றத்தில் புதிய கிரகம்
வால் நட்சத்திர தோற்றத்துடன் புதிய கிரகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது சூரியன் அருகே ஒரு புதிய கிரகம் இருப்பது தெரிய வந்துள்ளது. இது வால் நட்சத்திரம் போன்ற தோற்றத்துடன் காணப்படுகிறது. இதை நாசா விஞ்ஞானிகள் “ஹப்பிள் ஸ்பேஸ்” டெலஸ்கோப் மூலம் கண்டுபிடித்தனர். அதற்கு ஒசிரிஸ் என்ற புனைப்பெயர் சூட்டியுள்ளனர். இது பூமியில் இருந்து 153 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. “ஜுபிடர்” கிரகத்தைவிட சிறியது. முதன் முதலாக கடந்த 1999ம் ஆண்டு இதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். ஆய்வு மேற்கொண்ட போது விண்வெளியில் வீசிய பலத்த காற்றின் போது இந்த கிரகம் சூரியனை சுற்றி வருவது தெரிய வந்தது. இது கடுமையான வெப்பத்தை வெளிப்படுத்த கூடியது. இந்த கிரகத்துக்கு எச்டி 209458 பி என அதிகார பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது.
புற்றுநோய்க்கு மருந்தாகிறது ஆக்டோபஸ் நஞ்சு
வாஷிங்டன்: ஜோசியத்தால் பிரபலமடைந்த ஆக்டோபஸ் இப்போது மருத்துவத் துறையை கலக்கத் தொடங்கியிருக்கிறது. புற்றுநோய், உடல்வலி, ஒவ்வாமை போன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்க ஆக்டோபசின் நஞ்சை மருந்தாக பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மெல்பர்ன் பல்கலைக்கழகம், நார்வே அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம், மற்றும் ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து மருத்துவர் பிரையன் பிரை தலைமையில் கடல் வாழ் உயிரினமான ஆக்டோபஸ், கட்டில் பிஷ் எனப்படும் சிப்பி மீன் மற்றும் இதர ஆழ்கடல் மீன்கள் குறித்த ஆராய்ச்சி மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சியின் போது ஆக்டோபசில் மேலும் 4 புதிய இனங்களைக் கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள் இதில் கண்டறியப்படாத மேலும் பல இனங்கள் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், அன்டார்ட்டிகா கடல் பகுதியில் வாழும் ஆக்டோபசின் நஞ்சு மனிதர்களுக்கு ஏற்படும் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும் என்பதையும் இக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக விலங்குகளின் நஞ்சு மனித இனத்துக்கு மருந்தாக பயன்படுவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் மருத்துவம் சார்ந்த கடல் வாழ் உயிரினங்கள் குறித்த ஆய்வு மற்றும் பயன்கள் குறித்த ஆய்வு நடத்தப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்டோபசின் நஞ்சில் மிகக் குறைந்த அளவில் சத்து மிக்க புரதச் சத்து இருப்பதும், அது மனிதனுக்கு மிகப் பயனுள்ள ஒன்றாக இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அன்டார்டிக் கடல் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட சுமார் 203 ஆக்டோபஸ்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment