Pages

Your Ad Here

Monday, August 2, 2010

அதிக நேரம் அமர்ந்திருந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று



அதிக நேரம் அமர்ந்திருந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று புதிய ஆய்வு தெரிவிக்கின்றது.

எந்த நேரமும் அமர்ந்திருந்து வேலை செய்தல் கூடாது. ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கும் அதிகமாக அமர்ந்திருந்திருந்தல் கூடாது. 6 மணி நேரத்திற்கும் அதிகமாக அமர்ந்திருந்திருந்தால் கூடவே கூடாது. இப்படி இருந்தால் ஆண்கள் இளைய வயதிலேயே இறப்பதற்கு 18 சதவீதம் அதிக வாய்ப்பு இருக்கிறது. பெண்களுக்கு இந்த வாய்ப்பு இன்னும் அதிகம். அதாவது, 37சதவீதம் . மற்ற நேரங்களில் உடற்பயிற்சி, நடை, ஒட்டம், செய்தாலும்கூட, அதிக நேரம் உட்கார்ந்திருப்பது ஆபத்துதான்.

ஒரு வேலையும் செய்யாமல் எந்நேரமும் படுத்தே இருப்பது அதைவிட ஆபத்து. இந்த நிலை நீடித்தால் இளைய வயதிலேயே இறக்கும் ஆபத்து ஆண்களுக்கு 48 சதவீதமும் பெண்களுக்கு 98 சதவீதமும் அதிகம். நடுநடுவே எழுந்து நடந்துவிட்டு வாருங்கள். நின்றுகொண்டு வேலை செய்கிற வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்துகொள்ளுங்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்........

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails Subscribe