Pages

Your Ad Here

Monday, August 2, 2010

செய்தி [தமிழ்]

  ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிப்பதன் மூலம் எயிட் நோயினால் உயிரிழப்போரது எண்ணிக்கையை வரையறுக்க முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

நோயாளிகளுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அளித்தால் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில், எயிட்ஸ் நோயினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையை 20 வீதத்தினால் குறைக்க முடியும் என தெரிவித்துள்ளது.

2009ம் ஆண்டில் ஐந்து மில்லியன் எயிட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டை விடவும் ஒரு மில்லியன் பேருக்கு அதிகளவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 2015ம் ஆண்டளவில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 15 மில்லியனாக அதிகரிக்கும் எனக் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறெனினும், அநேக நாடுகளில் எயிட்ஸ் நோய்க்காக ஒதுக்கப்படும் நிதியின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. எயிட்ஸ் நோயாளிகளுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிப்பதன் மூலம் பாரியளவு பணத்தையும் மீதப்படுத்தலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.


 
கணனி உலகில் அதிக பாதுகாப்பு குறைபாடுகள்கொண்ட மென்பொருள்கள் அப்பிள்!


கணனி உலகில் அதிக பாதுகாப்பு குறைபாடுகள்கொண்ட மென்பொருள்கள் அப்பிள் நிறுவனத்துடையதென கணனி மென்பொருள் பாதுகாப்புச் சேவை நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. இவ்வளவு காலமாக மைக்ரோசொப்ட் நிறுவன மென்பொருள்களே அதிக பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளவையென கருதப்பட்டு வந்ததன.

' செக்கியுனியா ' (Secunia) எனும் நிறுவனமானது டென்மார்க் நாட்டை சேர்ந்த பிரபல கணனி மென் பொருள் பாதுகாப்புச் சேவை வழங்குனராக இயங்கி வருகிறது.

இந் நிறுவனத்தின் அறிக்கையின் படி அப்பிள் நிறுவனத்துடைய மென்பொருள்களே அதிக பாதுகாப்பற்றவையாக காணப்படுவதாகவும் அடுத்ததாக 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களில் முறையே ' ஒராக்கிள்' மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றது.

மேற்படி ஆய்வானது அப்பிளின் ' மெக் ஒஸ் ' (Mac OS )இயங்கு தளத்தையும் அப்பிளின் இதர மென்பொருள்களான iTunes, QuickTime, சபாரி ' மற்றும் 3ஆம் நபர் மென்பொருள்களான 'Flash , Java ' உட்பட அனைத்தையும் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாகும்.

அதன்படி குறைபாடுகள் அப்பிளின் இயங்குதளமான ' Mac OS ' ஐ விட மற்றைய மென்பொருட்களினாலேயே உண்டாக்கப்படுவதாக தெரிவிக்கின்றது.

3ம் நபர் மென்பொருள்களே அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக அந் நிறுவனம் தெரிவிக்கின்றது.

அதிகபாதுகாப்பு குறைபாடுகள் கொண்ட மென்பொருட்கள்.

1.அப்பிள்

2. ஒராக்கிள்

3.மைக்ரோசொப்ட்

4. எச்பி

5. அடோப் சிஸ்டம்ஸ்

6. ஐபிம்

7. விம்வெயார்

8. ஸிஸ்கோ

9. கூகுள்

10. மொஸிலா 



பூமியைப் போன்ற 140 கிரகங்களை கண்டுபிடித்த KEPLER விண்கலம்!







அமெரிக்காவின் வி்ண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாஸா அனுப்பியுள்ள (Kepler) கெப்லர் விண்கலம் 5 புதிய சூரிய குடும்பங்களையும் (Solar systems) 706 புதிய கிரகங்களையும் (Planets)கண்டுபிடித்துள்ளது. இதில் 140 கிரங்கள் பூமியைப் போன்றே உள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்த புதிய சூரிய குடும்பங்களும், கிரகங்களும் நமது பூமி அமைந்துள்ள பால்வெளி மண்டலத்திலேயே (Milky Way Galaxy)அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விண்வெளிக் கலம் செயல்பட ஆரம்பித்து 6 வாரம் தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக் குறுகிய காலத்தில் இத்தனை கண்டுபிடிப்புகளை நடத்தி சாதனை படைத்துள்ளது.

நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள இந்த exoplanets என்றழைக்கப்படும் சூரிய மண்டலங்களில் உள்ள 140 கிரகங்கள் நிலம், நீருடன் பூமியைப் போன்றே உள்ளன. உயிர்கள் உருவாகத் தேவையான நீர் உள்ளதால் இங்கு அடிப்படை உயிரினங்கள் இருக்காலம் என்று கருதப்படுகிறது.

நமது பால்வெளி மண்டலத்தில் சுமார் 100 பில்லியன் நட்சத்திரத்திங்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 100 மில்லியன் நட்சத்திரங்கள் உயிரினங்கள் வாழ சாத்தியமான கிரங்களாக இருக்கலாம் என்று கெப்லர் விண்வெளி்க் கலத்தை அனுப்பிய ஹாவர்ட் பல்கலைக்கழகத்தி் விண்வெளி ஆய்வுப் பிரிவின் தலைவரான பேராசிரியர் டிமிடார் சசலேவ் தெரிவித்துள்ளார்.

இந்த கெப்லர் விண்கலம் ஓராண்டுக்கு முன் ஏவப்பட்டது. ஆனால், கடந்த மாத மத்தியில் தான் பால்வெளி மண்டத்தின் பகுதியை எட்டிப் பிடித்து தனது ஆய்வைத் தொடங்கியது.

பால்வெளி மண்டலத்தில் உளள சிக்னஸ், லைரா, டிராகோ நட்சத்திர மண்டலங்களில் உள்ள அதிவேகத்தில் பயணிக்கும் சுமார் 1 லட்சம் நடத்திரங்களை தொடர்ந்து கண்காணித்து வரும் இந்த விண்கலம், அதன் ஒளி அளவில் ஏற்படும் மாற்றங்களை தனது 95 மெகா பிக்சல் கேமராக்கள் உதவியோடு பதிவு செய்துஇ பல்வேறு அலைவரிசைகளில் பிரித்து ஆய்வு செய்து, நாஸாவுக்கு தகவல்களை அனுப்பி வருகிறது.

இந்த விண்கலம் கண்டுபிடித்துள்ள பூமியைப் போன்ற கிரகங்களில் CoRoT - 7டி மற்றும் Wasp-17டி ஆகியவை முக்கியமானவை. இவை பூமியோடு மிகவும் ஒத்துள்ளன. இதில் CoRoT - 7டி பூமியை விட 5 மடங்கு பெரியது. Wasp-17டியின் விட்டம் 2 லட்சம் கி.மீயாகும் (பூமியின் விட்டம் 12, 000 கி.மீ தான்).

நமக்கு பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட ஜோகானஸ் கெப்லரின் மூன்றாவது விதியின் அடிப்படையில் தான் இந்த விண்கலம் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. இதனால் தான் இதற்கு கெப்லர் வி்ண்கலம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த இந்த கணித மேதை, கண்பார்வைக் குறைவுள்ளவராக இருந்தும்,இ கிரகங்களின் இயக்கம் குறித்த கணக்கீட்டை 1960களில் தனது 3 விதிகளில் அடக்கிக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கெப்லர் விண்கலத்தின் வாழ்நாள் 4 ஆண்டு காலமாகும்.



  
2010 விமானத்தை விட வேகமாகச் செல்லக் கூடிய கார்!

2012ம் ஆண்டில் விமானத்தை விட வேகமாகச் செல்லக் கூடிய கார் பரீட்சார்த்தம் பார்க்கப்படும் என தெரியவருகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்டு நோபல் தலைமையில்இ ஒரு குழு இதன் முன் முயற்சியாக மணிக்கு 1228 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் காரை உருவாக்கி பரீட்சார்த்தம் பாரத்திருந்தனர்.

ஜெட் விமான என்ஜினைக் கொண்டு, "பால்கான்" ரொக்கெட் தொழில்நுட்பம் பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்தக் கார் விமானத்தை விட வேகமாக மணிக்கு 1600 கிலோ மீட்டருக்குமான வேகத்தில் செல்லும். சுருக்கமாகச் சொல்லின் பார்முலா1 கார் பந்தயத்துக்கு பயன்படுத்திய காரை விட 180 மடங்கு சக்தி கொண்டதாக இருக்கும்.

ஆய்வுபணிகள் முடிந்து வடிமைக்கும் பணி தொடங்கியிருக்கும் இந்தக் கார் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவேறிய பின், 2012ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் சோதனை ஓட்டம் நடைபெறுமெனவும் தெரியவருகிறது.
 




"தெர்மோஸ்பியர்' அடுக்கில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது'


பூமியின் மேற்பரப்பில் அமைந்துள்ள "தெர்மோஸ்பியர்' அடுக்கில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது' என அமெரிக்காவின் நாசா விண்வெளி 
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பூமியின் மேற்பரப்பில் இருந்து 90 முதல் 600 கி.மீ, . உயரம் கொண்ட 
பகுதி தெர்மோஸ்பியர் அடுக்கு என்றழைக்கப்படுகிறது. வளிமண்டலம் முடிந்து விண்வெளி ஆரம்பிக்கும் பகுதியில் தெர்மோஸ்பியர் 
அடுக்கு அமைந்துள்ளது. சூரியனிலிருந்து வரும் சுற்றுச்சூழலுக்கு 
தீங்கான கதிர்களை வடிகட்டி அனுப்புவதில் தெர்மோஸ்பியர் 
அடுக்கு பெரும்பங்கு வகிக்கிறது. சமீப காலமாக 
வளிமண்டலத்தில் கார்பன் 
டை ஆக்சைடு அளவு அதிகரிப்பு மற்றும் புற ஊதாக்கதிர்களின் 
பாதிப்பால் தெர்மோஸ்பியர் அடுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக 
நாசா தெரிவித்துள்ளது.

இதனால் பூமியின் தட்ப வெப்ப நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடல்சார் ஆய்வுக்கழக விஞ்ஞானி ஜான் எம்மர்ட் வெளியிட்ட ஆய்வறிக்கை:

பூமியின் வளிமண்டலத்தில் கடந்த 43 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு திடீரென கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எங்களது ஆய்வில் வளி மண்டல அழுத்தம் திடீரென முப்பது சதவீத அளவிற்கு குறைந்துள்ளது. தெர்மோஸ்பியர் அடுக்கு சூரியனுடன் நெருங்கிய தொடர்பு 
கொண்ட பகுதியாகும். பூமியின் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் சூரியனிலிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் தெர்மோஸ்பியர் அடுக்கில் 
பரவி விரிவடைகிறது. இதை தெர்மோஸ்பியர் அடுக்கு, பூமிக்கு 
வராமல் தடுக்கிறது. சூரியனிலிருந்து வரும் வெப்பத்தின் அளவில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடந்த 2007 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு 
வரை தெர்மோஸ்பியர் அடுக்கில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் கார்பன் டை ஆக்சைடு அளவு 
அதிகரித்து வளிமண்டலத்தை தாண்டி தெர்மோஸ்பியர் அடுக்கு வரை பரவி விட்டது. எனவே தெர்மோஸ்பியர் அடுக்கில் கார்பன் டை ஆக்சைடு குளிரூட்டியாக செயல்பட்டு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த பாதிப்பிற்கு கார்பன் டை ஆக்சைடு வாயு மட்டும் காரணம் என கூற இயலாது. பிற காரணிகளும் தெர்மோஸ்பியர் அடுக்கில் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு காரணமாக இருக்கலாம். இவ்வாறு ஜான் எம்மர்ட் கூறினார். 



"மை ஸ்பேஸ் ' என்பது பேஸ்புக் பிரபலமடையும் முன்னர் பலரின் விருப்பத்திற்குரிய சமூகவலைப்பின்னல் தளமாக இருந்தது.
எனினும் பேஸ்புக்கின் அபாரவளர்ச்சி ' மை ஸ்பேஸ் ' ஐ பின்தள்ளியது. மீண்டும் இழந்த தனது முதலிடத்தை அடைவதற்கு அத்தளமானது இவ் வருடம் மீள்வெளியீடு செய்யப்படவுள்ளது. இத் தகவலை அதன் தற்போதைய உரிமையாளரான ' நியூஸ் கோர்ப் ' நிறுவனம் அறிவித்துள்ளது.

நியூஸ் கோர்ப் என்பது உலகின் 2ஆவது மிகப் பெரிய ஊடக பல்கூட்டுத்தாபன நிறுவனமாகும். மேற்படி நிறுவனம் 2005ஆம் ஆண்டில் இச் சமூகவலைப்பின்னல் தளத்தினை 580 மில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்தது. இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த ' நியூஸ் கோர்ப் ' நிறுவன உயர் அதிகாரியொருவர் பேஸ்புக் 500 மில்லியன் பாவனையளர் இலக்கினை எட்டியுள்ள போதிலும் ' மை ஸ்பேஸ் ' உலகளாவிய ரீதியில் தற்போதும் பிரபலமாகவுள்ளது. மேலும் மாதமொன்றிற்கு அமெரிக்காவில் மாத்திரம் 65 மில்லியன் முதல் 70 மில்லியன் வரையிலான நிரந்தர பாவனையளர்களைக் கொண்டிருப்பதாகவும். இன்னும் அதன் பாவனையாளர்கள் உலகம் முழுவதிலும் காணப்படுகின்றனர் எனவும் தெரிவித்தார். ' மைஸ்பேஸ் ' இனிமேல் புதிய இசைக்கலைஞர்களுக்கு தங்களின் படைப்புகளை பிரபலப்படுத்த வாய்ப்பளிக்கவுள்ளதாகவும், முற்றுமுழுதாக இளைஞர்களை குறிவைத்துள்ளதாகவும், இதன் புதிய வடிவம் இளமை ததும்பும் வகையில் காணப்படுமெனவும் , கணனி விளையாட்டுகளுக்கென அதிக கவனம் செலுத்தப்படுமெனவும் அவர் தெரிவிக்கின்றார். இந் நடவடிக்கையானது ' மைஸ்பேஸ் ' மற்றும் பேஸ்புக் இடையேயான போட்டித்தன்மையை மேலும் அதிகரித்துள்ளது.







  
புதிய தொழிநுட்ப அம்சங்களை தமது கார்களில் உள்ளடக்கவுள்ளதாக ஜப்பானின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ‘நிஷான்’ அறிவித்துள்ளது.

காரில் பயணிப்போரின் ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு பல புதிய தொழிநுட்ப அம்சங்களை தமது கார்களில் உள்ளடக்கவுள்ளதாக ஜப்பானின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ‘நிஷான்’ அறிவித்துள்ளது.

இதன்படி கார்களிலுள்ள குளிரூட்டீகளினூடாக விட்டமின் ‘சி’ யை விசிற உத்தேசித்துள்ளதாகவும் இது பயணிகளின் உடற்தோளினை ஈரலிப்பாகப் பேண உதவுமெனவும் இதன்மூலம் வெளியில் இருப்பதை காரினுள் ஆரோக்கியமாக உணரமுடியுமெனவும் அதன் பொறியியலாளர் தெரிவித்தார். உடலினுள் இதனோடு இரத்த ஓட்டத்தை சீர்செய்யக்கூடியதும் முதுகு வலியை குறைக்க கூடியதுமான இருக்கைகளையும் பொருத்த தாம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும் நவீனமயப்படுத்தப்பட்டதும் முக்கிய நாட்களை நினைவு கூறக்கூடியதுமான வேகமானிகளையும் பொருத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவற்றிற்கு மேலதிகமாக ‘என்டி கொலிசன்’ எனப்படும் விமானம் மற்றும் கப்பல்களில் பயன்படுத்தப்படும் ‘ராடர்’’ தொழிநுட்பத்திற்கு இணையான தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படவுள்ளது. இத்தொழில்நுட்பமானது விபத்து ஒன்று நிகழக்கூடிய அபாயமிருப்பின் அது தொடர்பாக பயணிக்கு சமிக்ஞைகளை எழுப்பி எச்சரிக்கை செய்யக்கூடியதாகும். அதிக போட்டித்தன்மை கொண்ட கார் சந்தையில் நிஷான் நிறுவனத்தின் இத்தொழில்நுட்பங்கள் அதன் போட்டியாளருக்கு தகுந்த போட்டியாக அமையுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 




உப்பின் அளவைக் குறைப்பதற்கு ஹெல்த் கனடா பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

கனேடியர்கள் உணவாகக் கொள்ளும் உப்பின் அளவைக் குறைப்பதற்கு ஹெல்த் கனடா தலைமையிலான குழுவொன்று பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

உப்பில் உள்ள ஒரு மூலகமான சோடியத்தை உண்பதைக் குறைத்தால், இருதய நோய்களும், பக்கவாதமும் ஏற்படுவது குறையுமெனவும், நாள்தோறும் 40 வரையான கனேடியர்களின் உயிர்களைக் காப்பாற்ற உதவுமெனவும் இருபத்தைந்து உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழு தெரிவித்தது.

தற்போது சராசரியாகக் கனேடியர் ஒருவர், மூவாயிரத்து நானூறு மில்லிகிறாம் சோடியத்தை உட்கொள்கிறார். ஆயிரத்து ஐந்நூறு மில்லிகிறாம் சோடியம் ஒருவருக்குப் போதுமானது. அதிகபட்சமாக இரண்டாயிரத்து முன்னூறு மில்லிகிறாம் சோடியத்தை ஒருவர் உட்கொள்ளலாமெனக் கருதப்படுகிறது.

இரண்டாயிரத்துப் பதினாறாம் ஆண்டளவில், சோடியப் பாவனையை ஏற்றுக் கொள்ளப்பட்ட அதிகளவான இரண்டாயிரத்து முன்னூறு மில்லி கிறாமாகக் குறைக்கவேண்டுமென அந்தக் குழு பரிந்துரைகளைச் செய்துள்ளது.

 

வறுமை -இந்தியா முதலிடம்
 
வறிய நிலையில் உள்ள ஒரு குடும்பம்
வறிய நிலையில் உள்ள ஒரு குடும்பம்
ஆப்பிரிக்காவில் உள்ள 26 மிக வறிய நாடுகளில் வசிக்கும் வறியவர்களின் எண்ணிக்கையை விட எட்டு வட இந்திய மாநிலங்களில் இருக்கும் வறியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக புதிய ஆய்வு கூறயுள்ளது.
பிகார், சத்தீஸ்கர், ஜார்காண்ட், மத்தியபிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய இந்திய மாநிலங்களில் 42 கோடியே பத்து லட்சம் பேர் வறிய நிலையில் இருப்பதாக ஐ நாவின் ஆதரவுடன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு முயற்சியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
வருமானத்தை மட்டுமல்லாது, கல்வி சுகாதார வசதிகள் போன்றவை எந்த அளவுக்கு கிடைக்கின்றன என்பது போன்ற விடயங்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பரந்து பட்ட வறுமைக் குறியீடு என்பதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு வறியவர்களின் நிலையை மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டியுள்ளதாக இந்த ஆய்வின் இயக்குனர் டாக்டர் சபினா அல்கிரி கூறியுள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தாலும் நாட்டில் வறுமை பெருமளவில் இருக்கிறது என்று பலரும் கருதிவந்ததை இந்த ஆய்வு உறுதிசெய்துள்ளது.
இவர்களின் புதிய அட்டவணையின் படி உலகில் மொத்தம் 170 கோடி பேர் வறியவர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிபேர் தெற்காசியாவில்தான் வாழ்கின்றனர். ஆப்ரிக்காவில் கால்வாசிபேர் வாழ்கின்றனர்.

பெண்களை விடவும் ஆண்களே அதிகளவு பொய் பேசுவதாக அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பொன்றின் மூலம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது


மூவாயிரம் பேரிடம் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவில் ஆண் ஒருவர் சராசரியாக நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் மூன்று பொய்களை கூறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, வருடமொன்றுக்கு பிரித்தானிய ஆண் ஒருவர் சராசரியாக 1092 பொய்களை கூறுவதாகக் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறெனினும், பெண்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு பொய்களையே பேசுவதாகவும், இதன்படி வருடமொன்றுக்கு 728 பொய்கள் கூறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிகமான நபர்கள் தங்களுடைய தாயிடமே பொய் பேசுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வாழ்க்கைத் துணையிடம் ஆண்கள் தங்களது குடிப்பழக்கம் அல்லது மதுபானம் அருந்திய அளவு தொடர்பிலான பொய்களை கூறுவதாகக் குறிப்பிடப்படுகிறது. அநேகமான சந்தர்ப்பங்களில் பெண்கள் தங்களது உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பொய் பேசும் பெண்கள் குற்ற உணர்ச்சியினால் பாதிக்கப்படுகின்ற போதிலும், ஆண்கள் அதிகளவு பாதிக்கப்படுவதில்லை எனக் குறிப்பிடப்படுகிறது


 

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails Subscribe