Monday, August 2, 2010
உலகம் உங்கள் கையில்
திருப்திகரமான வாழ்க்கை அமெரிக்கர்கள் முதலிடம்
சிட்னி: சர்வதேச அளவில் திருப்திகரமான வாழ்க்கையை அனுபவிப்பவர்கள் குறித்து ஏஎம்பி.நாட்செம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இதில் அமெரிக்கர்கள் முதலிடத்தைப் பிடித்தனர். ஸ்வீடன் மக்கள் இரண்டாம் இடத்தையும், ஆஸ்திரேலியர்கள் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். வேலை பளு, நிதி நெருக்கடி, குடும்ப சுமை என பல பிரச்னைகள் இருந்தாலும் அதையெல்லாம் சமாளித்து திருப்திகரமான வாழ்க்கை வாழ்வதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பணம் முக்கிய பங்கு வகிப்பதாக ஆஸ்திரேலியர்கள் தெரிவித்துள்ளனர். ஸி18.8 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால்தான் வாழ்க்கை இனிக்கிறது என்கின்றனர் அவர்கள். குறிப்பாக, சொந்த வீடு வைத்திருப்பதுடன், கடன் இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் என பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குட்டை பாவாடைக்கு இங்கிலாந்தில் தடை
லண்டன்: இங்கிலாந்தில் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் குட்டை உடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நேரடி தொடர்பு கொள்ள வேண்டிய சூழலில் உள்ள பெண் ஊழியர்கள், ஒழுக்கமான உடைகளை அணிய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சதாம்ப்டன் நகராட்சியின் குழந்தைகள் சேவை பிரிவு தனது 400 பெண் ஊழியர்களுக்கு ஒரு மெமோ அனுப்பி உள்ளது. அதில், குழந்தைகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் எச்சரிக்கையுடன் ஆடைகளை அணிந்து வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. முகம் சுழிக்கும் வகையில் குட்டை உடைகளை அணிந்து வந்தால் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
போதைமருந்து கடத்திய இந்தியருக்கு ஸி1.3 கோடி அபராதம்
லண்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் குல்திப் சிங் ஹைர். டெர்பிஷைர் பகுதியில் வசித்து வந்த இவர் போதை மருந்து கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பிர்மிங்காம் கிரவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.
விசாரணையில் போதை மருந்து கடத்தியது உறுதி செய்யப்பட்டதால், குல்திப் சிங் 6 மாதத்துக்குள் ஸி1.3 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை செலுத்தாவிட்டால், ஏற்கனவே 6 வருட சிறை தண்டனை அனுபவித்து வரும் அவர் மேலும் 2 ஆண்டுகளுக்கு சிறையில் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதே வழக்கில் தொடர்புடைய பால்தீப் சிங் மங்கருக்கு ஸி3.96 கோடியும், ஜஸ்விர் சிங் பத்தல் என்பவருக்கு ஸி24.69 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment