Pages

Your Ad Here

Wednesday, July 7, 2010

பேர்கர் பன்களை (Burger Bun) அதிகளவு உட்கொள்வதனால் அஸ்துமா நோய் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அண்மைய மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக வாரமொன்றுக்கு நான்குக்கும் மேற்பட்ட பேர்கர் பன்களை உண்ணும் சிறுவர் சிறுமியரிடையே அஸ்துமா நோய் ஏற்படக் கூடிய வாய்ப்பு அதிகளவில் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. 20 நாடுகளைச் சேர்ந்த 50000 சிறுவர் சிறுமியரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த முடிவு கிடைக்கப் பெற்றுள்ளது.

பழங்கள், மரக்கறி வகைகள் மற்றும் மீன் வகைகளை உட்கொள்வதனால் அஸ்துமா நோயைக் கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது. 1995ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரையில் வறிய மற்றும் செல்வந்த நாடுகளில் வாழும் சிறுவர் சிறுமியரிடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. சரியான உணவுப் பழக்கவழக்கங்களைக் கொண்டிராதவர்கள் அதிகளவில் அஸ்துமா நோயினால் பீடிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பர்கர் பன்களை உண்பதனால் உடலுக்கு தீங்கு இழைக்கக் கூடிய கொழுப்புச் சத்து அதிகளவில் உடலில் சேர்வதாகக் குறிப்பிடப்படுகிறது. குழந்தைகளின் எடை அஸ்துமா நோய் ஏற்படுவதற்கான மற்றுமொரு பிரதான காரணி என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails Subscribe