Pages

Your Ad Here

Tuesday, July 6, 2010

ரூ.10 லட்சம் வைரத்தை விழுங்கியது நாய்

வாஷிங்டன்: நாய் விழுங்கிய ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைரக்கல்லை, அமெரிக்க நகை வியாபாரி 3 நாள் காத்திருந்து மீட்டார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள நகைக்கடை அதிபர் ஒருவர், சோலி என்ற நாயை செல்லமாக வளர்த்து வருகிறார். எஜமானுடன் கடைக்கு வந்தது சோலி. அப்போது வைர வியாபாரி, தான் கொண்டு வந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைரத்தை கடை அதிபரிடம் காட்டினர். திடீரென வைரம் தவறி கீழே விழுந்தது. அருகில் இருந்த சோலி, ஏதோ உணவுப் பொருள்தான் விழுந்தது என நினைத்து வேகமாக ஓடி வைரத்தை கவ்வி விழுங்கியது. இதைப் பார்த்த எஜமானரும் வைர வியாபாரியும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சோலியை கால்நடை டாக்டரிடம் கூட்டிச் சென்று, வைரத்தை எப்படி மீட்கலாம் என ஆலோசனை கேட்டனர். சோலியின் வயிற்றுக்குள் சென்ற வைரம், மலம் மூலம் வெளியேறும். அப்போது மீட்பதுதான் சிறந்த வழி என டாக்டர் கூறினார். அதனால் சோலிக்கு அதிகளவில் உணவு கொடுத்து, 24 மணி நேரமும் கண்காணித்தனர். இரண்டு நாட்களாக ஏமாற்றம்தான் மிஞ்சியது. 3&வது நாள் மலத்துடன் வைரக்கல் வெற்றிகரமாக வெளியே வந்தது. அதன்பிறகே அனைவரும் நிம்மதியடைந்தனர்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails Subscribe