Pages

Your Ad Here

Tuesday, July 6, 2010

உலகம் உங்கள் கையில்


ஷாப்பிங் பைகளால் சாப்பாடு விஷமாகலாம்!

ஸ்காட்லாந்து: சுற்றுச்சூழலை கெடுக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக சணல், பேப்பர் பைகளை பயன்படுத்த வேண்டியது அவசியம். ஆனால், சணல் பையை கழுவியும், பேப்பர் பையை அடிக்கடி துடைத்து சுத்தப்படுத்தியும் பயன்படுத்துங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பெரிய மால்களில் எதிரில் பட்டவர்களின் ஷாப்பிங் பைகளை வாங்கி ஆராய்ந்தனர். அதில் 84 பேரின் பைகளில் இ&கோலி என்ற லெதல் நுண்கிருமி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கிருமி மூலம் உணவில் விஷத்தன்மை ஏற்படுமாம். 1996ல் இ&கோலி தாக்குதலுக்கு ஸ்காட்லாந்தில் 26 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல்.

தப்பியோடிய ஆமை எஜமானரிடம் சேர்ப்பு

லண்டன்: இங்கிலாந்தை சேர்ந்த 9 வயது சிறுமி மேடி டிப்பிள். ஆசை ஆசையாக அவள் ஒரு ஆமை வளர்த்தாள். அதன் பெயர் லோட்டி. எஜமானர் மீது ஆமைக்கு என்ன கோபமோ தெரியவில்லை. சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப். இது நடந்தது 2 ஆண்டுகளுக்கு முன்பு. ஆமையை காணாமல் வீட்டிலும், அக்கம் பக்கத்திலும் தேடினாள் டிப்பிள். கிடைக்கவில்லை என்றதும் முயற்சியை கைவிட்டாள்.
2 ஆண்டுகள் கழித்து லோட்டியை ஒருவர் தெருவோரம் கண்டுபிடித்தார். பக்கத்தில் இருந்த செல்லப் பிராணிகள் சிகிச்சை மையத்தில் சேர்த்தார். அதை சோதித்த டாக்டருக்கு சந்தேகம் வந்தது. இந்த ஆமையை இதற்கு முன் சிறுமி தூக்கி வருவாள் என்பதால், சிறுமி டிப்பிள் வீட்டுக்கு போன் செய்தார். டிப்பிள் போய் ஆமையை பார்த்து ஆச்சரியம் அடைந்தாள். அங்க அடையாளங்கள்படி அது அவள் வளர்த்த லோட்டிதான் என உறுதி செய்தாள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் 2 ஆண்டு நடந்து அந்த ஆமை 2 கி.மீ. தூரத்தில் மாட்டிக் கொண்டதுதான். அதுதான் ஆமையாச்சே!

பெண்ணை துன்புறுத்திய இந்தியர்

நியூயார்க்: இந்திய பெண் ஷாந்தி குருங் (21) டெல்லியில் மத்திய வெளியுறவு அமைச்சகத்தில் பணியாற்றுகிறார். இவர் நீனா மல்ஹோத்ரா என்ற இந்திய பெண் மீது நியூயார்க் போலிசில் புகார் செய்துள்ளார்.
ÔÔகடந்த 2006ம் ஆண்டில் ரூ.5000 சம்பளம் தருவதாக நீனா என்னை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றார். அப்போது எனக்கு வயது 17. எனது வயது மற்றும் சம்பளத்தை போலியாக குறிப்பிட்டு விசா பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, எவ்வளவோ முயன்றும் என்னை அவர் விடவில்லை. அடிமை போல நடத்தினார்ÕÕ என புகாரில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails Subscribe