Tuesday, July 6, 2010
இசைக்கருவி விலை ரூ.14 லட்சம்
லண்டன் : உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியின்போது தனது நண்பருக்கு பரிசு அளிப்பதற்காக ரஷ்ய தொழிலதிபர் ஒருவர் இசைக்கருவி ஒன்றை சிறப்பாக வடிவமைத்துள்ளார். அதன் விலை ரூ.14 லட்சம். பிளாஸ்டிக்கினால் ஆன இதில் வைரம் உட்பட பல விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இதை வடிவமைத்த ஆஸ்திரியா நாட்டின் நகை வடிவமைப்பாளர் க்ளெமென்ஸ் பாய்ட்டர் கூறுகையில், ÔÔமாஸ்கோ நகரில் நடைபெற்ற நகை கண்காட்சியில், வுவுசெலா இசைக்கருவியை அலங்கார கற்கள் பதித்து வடிவமைத்துத் தருமாறு தொழிலதிபர் ஒருவர் கேட்டார். கால்பந்து இறுதிப் போட்டிக்காக தேவை என்று கூறியதால் அவசர அவசரமாக அதை செய்து கொடுத்தேன்ÕÕ என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment