Pages

Your Ad Here

Tuesday, July 6, 2010

வேகமாக சாப்பிட்டு ரூ.14 லட்சம் வென்றார்


நியூயார்க் : வேகமாக சாப்பிடும் போட்டியில் தொடர்ந்து 4வது ஆண்டாக அமெரிக்கர் ஒருவர் அசத்தி சாதனையை தக்க வைத்துள்ளார்.
நியூயார்க்கில் ‘நாதன்ஸ்’ என்ற ஓட்டல் நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் குறைந்த நேரத்தில் நிறைய சாப்பிடும் போட்டி நடத்தப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் நடந்த போட்டிகளில் கலிபோர்னியாவை சேர்ந்த ஜோய் செஸ்நட் (26) என்பவர் வெற்றி பெற்றிருந்தார்.
இந்த போட்டியில் ‘ஹாட் டாக்’ (மாமிசத்தை அரைத்து கட்லட் போல செய்யப்படும் மேலை நாட்டு உணவு வகை) மட்டுமே இடம்பெறும். இந்த ஆண்டின் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. அதிலும் ஜோய் களமிறங்கினார்.
ஸ்டார்ட் சொன்னதும் ஹாட் டாக் ஐட்டங்களை உள்ளே தள்ளத் தொடங்கினார் ஜோய். 10 நிமிடத்தில் மணி அடித்தது. அப்போது 54 ஹாட் டாக் சாப்பிட்டு முடித்திருந்தார் ஜோய். அவருக்கு அடுத்தபடியாக அதிகம் சாப்பிட்டவர், ஜோயை விட 9 குறைவாக சாப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, மீண்டும் குறைந்த நேரத்தில் அதிகம் சாப்பிட்ட சாதனையை ஜோய் தக்க வைத்துக் கொண்டார். 34.4 செல்சியஸ் சூடாக இருந்த அந்த உணவை மற்றவர்களை விட ஜோய் எளிதாக சாப்பிட்டு அனைவரையும் அசர வைத்தார். அவருக்கு ரூ.14.1 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது.


No comments:

Post a Comment

Related Posts with Thumbnails Subscribe