Pages

Your Ad Here

Friday, June 25, 2010

முதுகுத் தண்டு காயம்

முதுகுத் தண்டில் காயம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபரை அசைக்க, நகர்த்த வேண்டாம். மீறினால், இயக்கமே முடங்கிப் போக வாய்ப்புண்டு.

முதுகுத் தண்டு பாதிப்புக்குச் சில அறிகுறிகள்
தலை காயம், சுய நினைவு இல்லாமை
கழுதில், பின்புறத்தில் பலத்த வலி
கழுத்தைத் திருப்ப முடியாமல் தவித்தல்
பலகீனம், உணர்ச்சியற்றுப் போகும் நிலை, முடக்குவாதம்
கழுத்து வேறு மாதிரியாக திரும்பி இருத்தல்

என்ன செய்யலாம்?
உடனடி மருத்துவ உதவி
அதே நிலையில் அவரை வைத்திருத்தல். கழுத்து அசையாமல் இருக்க, கழுத்தைச் சுற்றி போர்வையை வைத்தல்
சுவாசம், இருமல், இயக்கம், இவற்றில் பிரச்னை என்றால் சிறிசிஸி-ஐ தொடங்கவும்.
வாந்தி எடுத்தால், இரண்டு பேராகச் சேர்ந்து அவரை அருக்களித்த நிலையில் படுக்க வைக்கவும்.

விபத்து மூலமாக எலும்பு முறிவு ஏற்பட்டால் அல்லது கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும்.

செயல்படாத நிலையிலிருந்தால், சுவாசம் தடைபட்டால், சிறிசிஸி-ஐ தொடங்கவும்.
அதிக ரத்தப் போக்கு
மெலிதாகத் தொட்டால் கூட ஆதித வலி
உடல் பாகம், மூட்டு தோற்றம் மாறுதல்
அடிபட்ட பகுதியின் நுனி. (கை என்றால் விரல் நுனி) நீலமாக மாறுதல்
கழுத்தில், தலையில், பின்புறத்தில் முறிவு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வந்தால்.

மருத்துவ உதவி பெறும் வரை கீழ்க்கண்டவற்றைச் செய்யலாம்.
ரத்தப் போக்கை உடனடியாக நிறுத்தவும்.
அடிபட்ட இடத்தை செயலற்றதாக மாற்றவும்.
ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கவும்.
சுவாசிப்பதில் தடை இருந்தால், படுக்க வைக்கவும். உடலைவிட தலை தாழ்வாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

சுளுக்கு
தசைகள் அளவுக்கு அதிகமாக இழுக்கப்படும்போது, சுளுக்கு ஏற்படுகிறது. கணுக்கால், முழங்கால் பகுதிகளில் அதிகம் சுளுக்கு ஏற்படும். அதிக வலி இருந்தால் சுளுக்கின் தீவிரமும் அதிகம் என்று புரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails Subscribe