Pages

Your Ad Here

Friday, June 25, 2010

உலகக் கோப்பை-பிரான்ஸ் தோல்வி


தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.
செவ்வாய்கிழமை அந்த இரு நாடுகளுக்கு இடையேயான போட்டியில் தென் ஆப்பிரிக்கா பிரான்ஸ் நாட்டு அணியை 2-1 என்கிற கணக்கில் வென்றது.
ஆனாலும் இரு அணிகளுமே போட்டியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் ஒரு நாடு அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல் போவது இதுவே முதல் முறை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் நாட்டு அணியின் தலைவரான பேட்ரிஸ் எவாராவுக்கு விளையாடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
மேலும் போட்டியின் போது பிரான்ஸ் நாட்டு வீரர் ஒருவர் சிவப்பு அட்டை காட்டப்பட்டு ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
உருகுவே மெக்ஸிகோ இடையேயான போட்டியில் உருகுவே அணி 1-0 என்கிற கணக்கில் வென்றது.
இந்த இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
புதன்கிழமையன்று இங்கிலாந்து ஸ்லொவேனிய அணிகளுக்கு இடையேயான போட்டி இடம் பெறவுள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறாவிட்டால் அந்த அணியும் போட்டியிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படக் கூடும்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails Subscribe