Pages

Your Ad Here

Tuesday, August 10, 2010

விண்ணில் ஓர் அற்புத காட்சி!





விண்ணில் ஓர் அற்புத காட்சி!
 

கொல்கத்தா: செவ்வாய், வெள்ளி, சனிக்கிரகங்கள் முக்கோண வடிவில் அருகருகே தெரியும் அற்புத காட்சியை விரைவில் மாலை நேரத்தில் வானத்தில் பார்க்கலாம். வானில் விரைவில் அதிசய காட்சி ஒன்று அரங்கேறப்போகிறது. செவ்வாய், வெள்ளி, சனிக் கிரகங்கள் வானில் அருகருகே முக்கோண வடிவத்தில் காட்சி அளிக்கும். இதை, 15 நாட்களுக்கு தினமும் மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு மேற்கு திசையில் பார்க்கலாம்.

இந்த கிரகங்கள் அருகருகே இருப்பதுபோல் காட்சியளித்தாலும், அவை நீண்ட தொலைவில் உள்ளன. பூமியில் இருந்து, வெள்ளி கிரகம் 11.38 கோடி கி.மீ. தூரத்திலும், செவ்வாய் கிரகம் 30.6 கோடி கி.மீ. தூரத்திலும், சனிக் கிரகம் 153 கோடி கி.மீ. தூரத்திலும் இருக்கின்றன.

இதில், மற்ற கிரகங்களை விட வெள்ளி கிரகம் பூமிக்கு அருகில் இருப்பதால் பிரகாசமாக தெரியும். 3 கோள்களுக்கு அருகிலேயே நாளை மறுதினம் பிறை சந்திரன் காட்சி அளிக்கும். இந்த அற்புத காட்சிகளை பைனாகுலர் உதவியுடன் தெளிவாக பார்க்கலாம் என்று கொல்கத்தாவில் உள்ள பிர்லா கோளரங்க இயக்குனர் டி.பி.தாரி கூறினார்.






No comments:

Post a Comment

Related Posts with Thumbnails Subscribe