Pages

Your Ad Here

Tuesday, August 10, 2010

ரூ.20,000 செலவில் நாய்க்கு இறுதி சடங்கு



ரூ.20,000 செலவில் நாய்க்கு இறுதி சடங்கு

 
கும்பகோணம்: பெற்ற தாய், தந்தையை பராமரிக்காமல் அனாதையாக சாகவிடும் இந்தக் காலத்தில் வளர்த்த செல்லப் பிராணிக்கு ஸீ 20,000 செலவில் இறுதி சடங்கு நடத்திய சம்பவம் நெகிழ வைத்துள்ளது. கும்பகோணம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் நிஷ்களானந்தன். இவர், 14 ஆண்டுகளுக்கு முன்பு திருத்துறைப்பூண்டியில் ஒரு நாய்க்குட்டியை வாங்கி ஜினோ என பெயரிட்டு வளர்த்தார். ஸீ5,000த்தில் கட்டில், மெத்தை, தலையணை என்று தனி கவனிப்பு. வீட்டில் அனைவரும் தூங்கும் ஏ.சி. அறையில்தான் ஜினோவும் தூங்கும். இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜினோ, நேற்று அதிகாலை இறந்தது. குடும்பத்தினர் கதறி அழுதனர். மனிதர்களுக்கு செய்வதுபோன்று ஜினோவுக்கும் இறுதி சடங்கு செய்யப்பட்டது. ஜினோவை குளிப்பாட்டி அதற்கு பட்டுத்துணி போர்த்தினர். வாய்க்கரிசி போட்டு பால் ஊற்றினர். பின்னர் வீட்டின் முன்பகுதியில் குழி தோண்டினர். ஜினோவை கட்டிப்போட பயன்படுத்திய அரை கிலோ வெள்ளிச்செயினுடன் ஜினோவை அடக்கம் செய்தனர். இறுதி சடங்குக்கு மட்டும் ஸீ20,000 செலவு செய்தனர்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails Subscribe