Pages

Your Ad Here

Monday, August 16, 2010

Top 10 அறிவியல்

  Top 10 அறிவியல்
01.பாரிய விண்கல்லினால் பூமிக்கு பேராபத்து


பிரமாண்டமான விண்கல்லொன்று 2182ஆம் ஆண்டு பூமியுடன் மோதவுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். 1999 சRQ36 எனப் பெயரிடப்பட்டிருக்கும் இவ்விண்கல் பூமியுடன் மோதுவதற்கான சந்தர்ப்பம் 1000இல் ஒன்று என்ற நிகழ்தகவில் காணப்படுவதாகவும் அவ்விஞ்ஞானிகள் மேலும் குறிப்பிட்டிருக்கின்றனர். 1999 RQ36 விண்கல்லானது 2182ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் திகதி பூமியுடன் மோதுவதற்காக சாத்தியக் கூறுகள் அதிகமாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 1800 அடி நீளமான இந்த விண்கல் பூமியுடன் மோதுண்டால் பாரிய அழிவுகளை சந்திக்க நேரிடும். மேக்ஸிக்கோவின் Chicxulub கிடங்கினை உருவாக்கிய விண்கல் மோதலானது பூமியில் பாரிய சுனாமி போன்ற அனர்தத்தினை ஏற்படுத்தியிருக்கும். அந்த விண்கல் மோதல்தான் டைனோஸர் போன்ற விலங்கினங்களின் அழிவுக்கும் காரணமாக அமைந்திருந்தது. அதைவிட பாரிய அழிவினை 1999 RQ36 விண்கல் ஏற்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விண்கற்கல் சூரிய சக்தியினை உள்வாங்கி மீண்டும் அந்த சக்தியை கதிர்ப்பு செய்வதால் விண்கற்களில் பாதைகள் மாறுவதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன எனவும் விஞ்ஞானிகள் ஆறுதல் கூறுகின்றனர். எது எப்படியிருப்பினும் இந்த பாரிய விண்கல்லானது தற்பொழுது பூமியின் பின்னால் இருப்பதால் 2011ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. அப்பொழுதுதான் அதனை விஞ்ஞானிகளால் அவதானிக்க முடியுமாம். 1999 RQ36 விண்கல்லின் பாதையினை மாற்றவேண்டுமானால் 100 வருடங்களுக்கு முன்பாகவே அதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும். ஆகையினால் அணுகுண்டுகளை காவிச்செல்லும் விமானங்களை பயன்படுத்துவது தொடர்பாகவும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.



02.உலகின் முன்னணி கையடக்கத் தொலைபேசிகளில் ஒன்றாகக் கருதப்படும் பிளக்பரி தொலைபேசிகளின் சில தொழிற்பாடுகளுக்கு அரபு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.






குறிப்பாக சவூதி அரேபியா மற்றம் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவற்றில் பிளக்பரி கையடக்கத் தொலைபேசியின் சில தொழிற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளக்பரி கையடக்கத் தொலைபேசியின் சில தொழிற்பாடுகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அமையப் பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது. இணைய பாவனை மற்றும் மின் அஞ்சல் பாவனைகளுக்கு சவூதி அரேபியா தடை விதித்துள்ளது. ஹெட் செற்களின் ஊடாக இணைய பாவனை மேற்கொள்ளப்படும் போது அவற்றை கண்காணிக்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும் இதனால் இந்த தொழிற்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் 500,000 பிளக்பரி பாவனையாளர்களும், சவூதி அரேபியாவில் 400,000 பிளக்பரி பாவனையாளர்களும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.



03.பாக்கு மென்றால் புற்றுநோய்



ஆசியாவின் பல பகுதிகளில் பாக்கு மெல்வது என்பது ஒரு சாதாரண விஷயம். ஆனால் இவ்வாறு செய்வதால் வாய் புற்றுநோய் ஏற்படுகிறது என்றும், அதனால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையானது, கடந்த 40 ஆண்டுகளில் நான்கு மடங்கு உயர்ந்துள்ளதாகவும் தாய்வான் மருத்துவமனை ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தாய்வானின் சுங் ஷான் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் வாய் புற்றுநோயால் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரில் 13 பேர் மரணம் அடைவது தெரியவந்துள்ளது. தாய்வானின் கிராமப்புறங்களில் பாக்கு மரம் ஒரு பணப்பயிராக வளர்க்கப்படுகிறது. பெருமளவில் பாக்கு பயிர் செய்யப்பட்டதை தொடர்ந்து, தாய்வான் மக்களுக்கு பாக்கு மெல்லும் பழக்கம் அதிகளவில் ஏற்பட்டது. தாய்வானில் இருக்கின்ற ஆண்களில் 14 சதவீதம் பேர் பாக்கு மெல்கின்றனர். வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கு பாக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 2100 பேர் வாய் புற்றுநோயால் பலியாகியுள்ளனர். தாய்வானில் ஆண்களின் மரணத்திற்கு நான்காவது முக்கிய காரணமாக வாய் புற்றுநோய் பார்க்கப்படுகிறது. பாக்கு உபயோகப்படுத்துவதை தடுக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது, ஆனால் கட்டுமான பணியாளர்கள், வாகன ஒட்டுநர்கள், மீனவர்கள் போன்றவர்களிடம் பாக்கு பிரபலமாக இருக்கிறது. கேஃபைன் போன்றே பாக்கும் தங்களை விழித்திருக்க வைக்க உதவுவதாக இவர்கள் கூறுகிறார்கள். அரசாங்கம் தாங்கள் தொலைக்காட்சி, செய்தித்தாள், கல்விசாலைகள், தேவாலயங்கள், கிராமங்கள் போன்றவற்றில் பாக்குக்கு எதிராக செய்யும் பிரச்சாரத்தால் கடந்த 3 ஆண்டுகளாக இந்த பழக்கம் குறைந்திருப்பதாக கூறுகிறது. ஆனால் வாய் புற்றுநோயால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை குறைய கொஞ்சம் காலம் ஆகும். ஏனென்றால் 1970, 1980 களில் பாக்கு மெல்ல ஆரம்பித்தவர்களுக்கு இப்போது புற்றுநோய் வர ஆரம்பித்துள்ளது.



 
04.பிரிட்டன் மற்றும் பின்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் அதிகம் கல்வி கற்றவர்களுக்கு நினைவாற்றல் மங்கி போவது குறைவாக உள்ளது என தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.




இறந்த பின்னர், கல்வி அதிகம் கற்றவர்கள், குறைவாக கற்றவர்கள் என இருவருக்குமே ஒரே அளவு மூளை மழுங்கி போய் இருந்தாலும், உயிரோடு இருக்கும் போது அதிகம் கல்வி கற்றவர்கள் நினைவாற்றல் மங்கி போயுள்ளதற்கான அறிகுறிகளை அதிகம் காண்பிப்பதில்லை என ஆய்வறிக்கை கூறுகிறது. மிகவும் வயதான 872 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வயதானவர்களிடம் அவர்களின் கல்வி தகுதி குறித்தும் கேட்கப்பட்டுள்ளது. இதில் அதிகம் கல்வி கற்றவர்கள், நினைவாற்றல் மங்கி போய் இருந்தாலும், அதனை நன்றாக சமாளிக்க கூடிய அளவில் இருப்பது தெரியவந்துள்ளது. அத்தோடு கல்விக்காக செலவிடப்படும் ஒவ்வொரு ஆண்டும், நினைவாற்றல் மங்கி போவதை 11 சதவீதம் வரையில் குறைப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு கிட்டதட்ட 20 ஆண்டுகள் நடைபெற்றுள்ளது.




05.பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலை பின்னல் தளங்களில் அதிக நேரம் விரயம் செய்யும் ஊழியர்களினால் பிரித்தானிய நிறுவனங்களுக்கு பில்லியனளவில் பணவிரயமேற்படுவதாக ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது.


பிரித்தானிய இணையத்தளமொன்று நடத்திய வாக்கெடுப்பு ஒன்றின் முடிவின்படி பிரித்தானியாவின் 34 மில்லியன் ஊழியப்படையில் 2 மில்லியன் பேர் 1 மணித்தியாலத்திற்கும் அதிகமான தங்களது வேலை நேரத்தை மேற்படி சமூக வலை பின்ணல் தளங்களில் செலவிடுவதாக அந்த இணையத்தளம் தெரிவிக்கின்றது. இது மொத்த வேலை நேரத்தில் 8 இல் 1 பங்காகும்.

பிரதம நிறைவேற்று அதிகாரியின் கருத்துப்படி ஐக்கிய இராச்சியத்தில் ஊழியர்கள் மிகவும் அதிக நேரத்தினை சமூக வலை பின்னல் தளங்களில் செலவிடுவதாகவும், இது நிறுவனங்களினால் கவனத்தில் கொள்ளப்படுவதில்லையெனவும் இது ஊழியர்களின் ஆக்கத்திறனில் மறைமுக பாதிப்பை எற்படுத்துவதாகவும் இதனால் நிறுவனங்கள் பல்வேறு நட்டங்களை சந்திப்பதாகவும் தெரிவித்தார். இத்தகைய செயற்பாட்டினால் நிறுவனங்களுக்கு 14 பில்லியன் பவுண்கள் வரை பணவிரயமேற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அவ்வாய்வறிக்கையின்படி பிரித்தானிய ஊழியர்களில் 55% வீதத்திற்கும் அதிகமானவர்கள் தாம் தமது வேலைநேரங்களின் மேற்படி தளங்களினை உபயோகிப்பதாக வெளிப்படையாகth தெரிவிப்பதாகவும் இதில் பலர் மிகவும் அதிக நேரம் செலவிடுவதாகவும் அவ் அறிக்கை தெரிவிக்கின்றது. இப்புதிய சவாலனது நிறுவனங்களுக்கு பாரிய அடியென தெரிவிக்கப்படுகின்றது.





 
06.கிரீன்லாந்து பகுதியில் உருகும் பனிப்பாறைகளால் வெள்ளப் பெருக்கு அபாயம்!






வட அமெரிக்காவில் அமைந்துள்ள கிரீன்லாந்து பகுதியில் உருகும் பனிப்பாறைகளால் வெள்ளப் பெருக்கு அபாயம் உள்ளதாக நெலாவர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் அன்ட்ரூவ் மியூன்கள் தெரிவித்துள்ளார்.

தற்போது அங்குள்ள பீட்டர்மேன் என்ற பனிப்பாறை உடைந்துள்ளது. இதில் இருந்து பிரிந்த அந்த ராட்சதபாறை உருக தொடங்கியுள்ளது.

அது 100 சதுர மைல் பரப்பளவு கொண்டது. அமெரிக்காவின் எம்பயர் கட்டிட அளவு உயரமாக உள்ளது. ஒரு சிறிய ஐஸ்தீவு போன்று இது காட்சி அளிக்கிறது. அமெரிக்காவின் மேன்காட்டன் நகரை போன்று 4 மடங்கு பெரியது. இதிலிருந்து உருகி ஓடி வரும் தண்ணீரினால், அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது நாசா செயற்கை கோள்மூலமும் இது தெரியவந்தது.

கிரீன்லாந்து பனியாற்றில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல ஐஸ்கட்டிகள் உருகு கின்றன. தற்போதுதான் ராட்சத அளவிலான பனிக்கட்டி உருகியுள்ளது.

உலக வெப்பமயமாதல் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

 
07.பெட்ரோல் இல்லாமல் காற்றின் மூலம் இயங்கும் கார் தயாரிப்பு






நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. இதனால் காரில் பயணம் செய்பவர்கள் விலையேற்றம் காரணமாக அதில் பயணம் செய்ய அச்சப்படுகின்றனர். இனி அந்த கவலை வேண்டாம்.

பெட்ரோல் இல்லாமல் காற்றின் மூலம் இயங்கும் கார் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கார் இயங்க தேவையான எரிபொருளை மண்ணில் உள்ள பேக்டீரியாவில் இருந்து எடுக்கப்படும் என்சைம்களை (வேதிப்பொருளை) கொண்டு காற்றின் மூலம் தயாரிக்க முடியும் என கண்டு பிடித்துள்ளனர். இதற்கு மிகவும் குறைந்த செலவாகும்.

இதன்மூலம் சுற்றுச்சூழலில் மாசு ஏற்படாது. கார் என்ஜின்களும் பழுது படாது என்றும் தெரிவித்துள்ளனர்.

“என்சைம்”களில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் “புரோபேன்” மூலக்கூறில் இருந்து 3 கார்பன் அணுக்கள் சங்கிலி தொடர் போன்று உருவாகிறது. இது தொடர்ச்சியாக சங்கிலியாக உருவாகி பெட்ரோல் ஆக மாறுகிறது. இதுவே செயற்கை எரி பொருள் ஆகிறது என கலி போர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்கஸ்ரிப்பே தெரிவித்துள்ளார்.







 

08.'கூகுள் மீ' இரகசிய தளம்! : உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னுமில்லை 

 


' கூகுள் மீ ' என்ற சமூக வலைப்பின்னல் தளமொன்றினை கூகுள் இரகசியமாக உருவாக்கி வருவது அனைவரும் அறிந்த விடயம்.

கூகுள் இது தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.BR>
இந்நிலையில் தனது மற்றைய சேவைகளான 'ஜீ மெயில்' எனப்படும் மின்னஞ்சல் கணக்குஇ கூகுள் பஸ் மற்றும் அதன் மற்றைய வெளியீடுகளை அடிப்படையாகக் கொண்டும் ' ஸ்லைட் ' மற்றும் ' சிங்கா ' ஆகியவற்றினை உபயோகப்படுத்தியும் தனது சமூக வலைப் பின்னல் தளத்தினை உருவாக்கி வருவதாகப் புதிய தகவல்கள் கசிந்துள்ளன.BR>
' ஸ்லைட் ' நிறுவனமானது மற்றைய சமூக வலைப்பின்னல் தளங்களான ' மைஸ்பேஸ் ' மற்றும் 'பேஸ்புக்' ஆகியவற்றுக்கு மென் பொருட்களை உருவாக்கிய நிறுவனம்.BR>
இந் நிறுவனத்தை கடந்த 4ஆம் திகதி கூகுள் விலைக்கு வாங்கியது.BR>
மேலும் ' சிங்கா ' எனப்படும் ' மைஸ்பேஸ் ' மற்றும் 'பேஸ்புக்' ஆகியவற்றுக்கு இயங்குதளம் சார்ந்த விளையாட்டுக்களை உருவாக்கிய நிறுவனத்தில் கூகுள் 100 மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.BR>
கூகுளின் இத்தகைய நடவடிக்கைகளானது, பாவனையாளர்களுக்குப் புது வகையான அனுபவத்தினை தரும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இத்தளத்தில் கணினி விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.BR>
கூகுளின் மற்றைய சேவைகளான கூகுள் 'எப்ஸ்', கூகுள் 'வொயிஸ்', கூகுள் 'ரீடர்' மற்றும் 'ஐ' கூகுள் போன்றவற்றின் பாவனையாளர்களைத் தனது கூகுள் 'மீ' தளத்திற்கான இலக்காக கூகுள் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.BR>
ஏற்கனவே கூகுள் நிறுவனம் கூகுள் 'பஸ்', 'ஓர்குட்' ஆகிய சமூக வலைபின்னல் தளங்களை உருவாக்கி தோல்வி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. BR>
'பேஸ்புக்'கின் பிரமாண்ட வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் மற்றைய தளங்களின் எண்ணிக்கை என்பன கூகுளின் இன்னும் அறிவிக்கப்படாத கூகுள் 'மீ' தளத்தின் வெற்றிக்குப் பெரும் சவால்களாக விளங்குகின்றன.


09.மனிதன் தூங்கும் போது சுறுசுறுப்பாக இயங்குமாம் மூளை




தூங்கும் போது உடலும் மனமும் செயலற்று இருக்கும் எனபது தான் பலரின் கருத்து ஆனால் தூங்கும் போது தான் மூளை சுறுசுறுப்பாக இயங்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். மேலும் தூங்கும் போது மின் தூண்டுதல் மூளையில் ஏற்படுகின்றதாம்.

அதிக அளவில் மின் தூண்டுதல் ஏற்படுபவர்கள் நீண்ட நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்கள் எனவும் ஆராய்ச்சியில் நிருபிக்கப்பட்டுள்ளது. இந்த மின் தூண்டுதல்கள் ஸ்பின்ட்ல்ஸ் என கூறப்படுகிறது. இதன் செயல்கள் மூளையில் உள்ள தலாமஸ் என்ற பகுதியில் நடக்கிறதாம்.

தூங்கும் போது கேட்கும் சத்தங்களை வேறு பகுதிகளுக்கு திருப்பி விடும் வேலையை இந்த தலாமஸ் செய்கிறது. அதனால் தான் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது நமக்கு சத்தம் கேட்பதில்லை. தூங்கும் போது மூளையில் அடிப்பாகத்திலிருக்கும் வேறு நரம்பு மண்டலங்கள் இயங்கத் தொடங்குகின்றன.

தூங்கும் போது தான் நியூரான்கள் மிக சுறுசுறுப்பாக இயங்கி ஆரோக்கியத்திற்கு தேவையான கடினமான சில பணிகளை செய்கின்றன என்பதால் நன்றாக தூங்க வேண்டும் என்கிறார் தூக்கம் குறித்த மருத்துவ நிபுணரான னுச எல்லேன்போகேன்.

ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தினசரி 16 மணிநேர தூக்கம் மிக அவசியமாகும். தற்போது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பெரியவர்களுக்கு 7 மணி நேரத் தூக்கம் போதுமானது என கண்டறியப்பட்டுள்ளது. மொத்தத்தில் தூக்கம் வந்தால் தூங்குவதில் எந்த தவறும் இல்லை எனவும் கூறுகின்றனர் மன நல மருத்துவர்கள்.

 

பூமியில் மனித இனத்துக்கு ஆபத்து?



லண்டன்: அடுத்த சில நூற்றாண்டுகளில் வேற்று கிரகங்களில் மனிதனை குடியமர்த்த வேண்டியது மிகவும் அவசியம். பூமியில் மட்டுமே இருந்தால், மனித இனமே கூண்டோடு அழிந்து விட வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதாவது:

நல்லதே நடக்கும் என்ற எண்ணம் எனக்கும் உண்டு. எனினும், மனித இனம் பூமியில் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு வாழ முடியும் என்பது குறித்து நீண்ட விவாதம் நடத்த வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அடுத்த சில நூற்றாண்டுகளில் பூமியில் மிகப்பெரிய அழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.


கடந்த காலங்களில் சில சமயங்களில் மனித இனம் இனியும் தப்புமா? என்ற கேள்வி எழுந்ததும், அதிலிருந்து நூலிழையில் தப்பியதையும் அறிவோம். 1963ல் ஏற்பட்ட கியூபா ஏவுகணை நெருக்கடியை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இதுதவிர, 1945ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி மீது அமெரி க்கா அணுகுண்டு விசியதால் லட்சக் கணக்கானோர் உயிரிழந்ததுடன் பலர் கொடிய நோயால் பாதிக்கப்பட்டனர். மேலும் சூறாவளி, பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களின் அச்சுறுத்தலும் தொடர்கதையாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி வரும் காலங்களிலும் அடிக்கடி நிகழ வாய்ப்பு உள்ளது. இவ ற்றை எல்லாம் எதிர்கொள்வதற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.


முக்கியமாக அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அடுத்ததாக, பூமி வெப்பமாதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது உட்பட சுற்றுச்சூழலை பாதிக்கும் பல்வேறு விஷயங்களை தடுக்க வேண்டும். இவையெல்லாம் அவ்வளவு எளிதில் நடக்கும் விஷயம் அல்ல. இதிலிருந்து தவறினால் மனித இனமே கூண்டோடு அழியலாம்.


எனவே, ஆயிரமாயிரம் ஆண்டுகளையும் கடந்து மனித இனம் வாழ வேண்டுமானால், வேற்று கிரகங்களில் குடியேற்றுவது அவசியமாகிறது. அதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails Subscribe