Pages

Your Ad Here

Wednesday, May 5, 2010

கேமராவைத் திருடிய கில்லாடி 'ஆக்டோபஸ்' : விசித்திர சம்பவம்

கேமராவைத் திருடிய கில்லாடி 'ஆக்டோபஸ்' : விசித்திர சம்பவம்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 மே 2010, 05:27.26 பி.ப GMT ]
நீச்சல் வீரரிடமிருந்து கேமராவைத் திருடுவதற்காக, கில்லாடி 'ஆக்டோபஸ்' ஒன்று ஐந்து நிமிடங்களாக மல்லுக்கட்டிய விசித்திர சம்பவம், அந்தக் கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது.

விக்டர் ஹூவாங், நியூசிலாந்தின் கடற்கரை நகரமான வெலிங்டன் கடல் பகுதியில் நீச்சலடித்துக் கொண்டிருந்தார். கேமரா மூலம், கடலடியில் படம் பிடித்துக் கொண்டிருந்தார்.அப்போது, மறைவிடத்திலிருந்து திடீரென ஆக்டோபஸ் ஒன்று, ஒரு கையை நீட்டியபடி வேகமாக வெளியே வந்தது.

அது தன்னைத் தான் தாக்க வருகிறது என நினைத்து, அதிர்ந்தார் விக்டர். ஆனால் ஆக்டோபஸ் இவர் எதிர்பாராத வகையில் இவர் கையிலிருந்த கேமராவைப் பிடுங்க முயற்சித்தது. அப்போது கேமரா இயங்கிக் கொண்டிருந்தது. கேமரா பிடியை இறுக்கினார் விக்டர் ஆக்டோபஸ் விடுவதாக இல்லை.கேமராவுக்காக இருவரும் மல்லுக்கட்டிய சம்பவம், அப்படியே அந்தக் கேமராவில் பதிவானது. ஐந்து நிமிட போராட்டத்துக்குப் பின், கோபம் கொண்ட விக்டர், தன் கையிலிருந்த துப்பாக்கியால் அதன் கையில் தாக்கினார். அதிர்ச்சியில் ஆக்டோபஸ் பின்வாங்கியது.விக்டரின் கேமரா தப்பியது. அதிர்ச்சியிலிருந்து மீளாத விக்டர், 'அது கடையில் திருடிக் கொண்டு ஓடும் திருடனைப் போல, என்னிடமிருந்து கேமராவைப் பறித்துக் கொண்டு ஓட முயன்றது' என்று கூறுகிறார்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails Subscribe