Wednesday, April 27, 2011
சிவப்பு மிளகாயை குறைத்தால் பருமனான உடல் மெலியும
லண்டன் : உணவில் சிவப்பு மிளகாய் தூளை மிதமாக சேர்த்துக் கொண்டால் பசி குறைந்து உணவின் அளவை குறைக்கும். அதன்மூலம், உடல் எடையை குறைக்கலாம் என்று இங்கிலாந்து ஆய்வில் தெரிய வந்துள்ளது. பசி வந்தால் சிலர் தட்டே பறந்து போகுமளவு ஃபுல் கட்டு கட்டுவதுண்டு. அதனால், உடல் எடை அதிகரித்து பல்வேறு நோய்கள் வந்து சேரும். பொதுவாக சதை போட விரும்பும் ஒல்லியானவர்கள் உணவுக்கு முன் சூப் போன்ற பசியை தூண்டும் (அபடைசர்) பானங்களை குடிப்பதுண்டு. அதற்கு நேர்மாறாக உடல் பருமனாக இருப்பவர்கள் உணவின் அளவைக் குறைக்க இயற்கையான வழி குறித்து இங்கிலாந்தில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.
6 வாரங்கள் நடந்த ஆய்வில் சராசரி எடை கொண்ட 25 பேரில் மசாலா உணவு ரசிகர்கள், அதற்கு எதிரானவர்கள் என 2 குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர். மசாலா உணவு விரும்பிகளுக்கு 1.8 கிராம், விரும்பாதவர்களுக்கு 0.3 கிராம் சிவப்பு மிளகாய் தூள் உணவுக்கு முன் தரப்பட்டது. 6 வாரங்களுக்கு பிறகு நடந்த சோதனையில், மிளகாய் தூள் குறைவாக சேர்த்தவர்களுக்கு பசி குறைந்ததும், அதிகம் சேர்த்தவர்களுக்கு பசி அதிகரித்ததும் தெரிய வந்தது.
பொதுவாக உடல் சூட்டை மிளகாய் தூள் அதிகரித்து அதிக கலோரிகளை இழக்கச் செய்வதால் அதிக பசி ஏற்படும். இதை மிளகாயின் கேப்சைசின் என்ற பொருள் செய்கிறது. அதற்கேற்ப உணவில் அளவு அதிகரித்தோ அல்லது சாப்பிடும் நேர இடைவெளி குறைந்தோ உடல் பருமனில் கொண்டு சேர்க்கும். மிளகாய் தூளின் அளவு குறைவாக இருந்தால் பசி குறையும். அத்துடன் உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு முறை ஆகியவற்றின் மூலம் உடல் பருமனை குறைக்க முடியும் என்று லண்டனில் ஆய்வுக் குழுவை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment