| | |
| பறவைகள் குறித்த புத்தகம் |
உலகத்தின் மிக விலை உயர்ந்த அரிய புத்தகமான ஜான் ஜேம்ஸ் அடுபோன்ஸின் ‘பேர்ட்ஸ் ஆஃப் அமெரிக்கா’புத்தகம் சோதிபைஸ் ஏலக்கடையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த புத்தகத்தின் முழுமையான வடிவங்களில் 119 பிரதிகள் மட்டுமே தற்போது இருப்பதாக அறிய வந்துள்ளது. அவற்றில் 108 புத்தகங்கள் நூலகம் மற்றும் அருங்காட்சியங்களில் உள்ளன.
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்த புத்தகத்தின் தனி பிரதி ஒன்று 8.8 மில்லியன் டாலர்களுக்கு விற்பனையாகியது.
டிசம்பர் மாதம் விற்பனை செய்யப்படும் பிரதி மறைந்த லார்ட் ஹெஸ்கத் அவர்களின் சேகரிப்பில் இருந்து வருகிறது.
இந்த புத்தகத்தில் 500 பறவை இனங்களின் சுமார் 1000 பொருள் உயர ஒவியங்கள் உள்ளன.
இந்த ஒவியங்கள் மற்றும் ஆராய்ச்சியை முடிக்க வன உயிர் ஒவியரான ஜான் ஜேம்ஸ் அடுபோனுக்கு சுமார் 12 ஆண்டுகாலம் பிடித்தது.
அமெரிக்கா முழுவதும் பயணித்து பறவைகளை சுட்டு, பின்னர் அவற்றை கம்பியில் கட்டி தொங்கி விட்டு அவற்றை இவர் வரைந்துள்ளார்.
அதன் பின்னர், பிரிட்டனுக்கு சென்ற அவர், புத்தகங்களை பிரசுரித்து அவற்றை செல்வந்தர்களிடம் விற்பனை செய்தார்.
02.'13 ஆணிகளும் 5 ஊசிகளும் அகற்றப்பட்டன'
| | |
| 2 அங்குலம் வரை நீளமான ஆணிகள் அகற்றப்பட்டுள்ளன |
சவுதி அரேபியாவில் கொடுமைகளுக்கு உள்ளாகி இலங்கை திரும்பிய வீட்டுப் பணிப்பெண்ணி்ன் உடலில் இருந்து 18 ஆணிகளையும் ஊசிகளையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
தனது வீட்டு எஜமானி, தனக்கு தண்டனையளிப்பதாகக் கூறி ஆணிகளை சூடேற்றிக்கொடுக்க, எஜமான் அவற்றை உடலில் ஏற்றியதாக எல்.ஜீ.ஆரியவதி என்ற இந்த வீட்டுப் பணிப்பெண் கூறுகின்றார்.
இன்னும் ஆறு ஆணிகள் இந்தப் பெண்ணின் கைகளிலிருந்து அகற்றப்படாதிருப்பதாக கூறும் மருத்துவர்கள், அவற்றை அகற்றுவதால் பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
| | |||
| இன்னும் ஆறு ஆணிகள் அகற்றப்படாதுள்ளன |
இந்த துன்புறுத்தல் சம்பவம் குறித்து ரியாத்தில் உள்ள அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.
சுமார் 1.8 மில்லியன் இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். இவர்களில் 70 வீதமானவர்கள் பெண்களாவர்.
வீட்டுவேலையாட்களாக பணிபுரியும் இலங்கையர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலும் சிறு தொகையினர் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளிலும் தொழில் புரிகின்றனர்.03.குகைக் கரடிகள் அழிய மனிதனே காரணமானான்
| | |
| உறை யுகத்து குகைக்கரடி-கற்பனை ஓவியம் |
குகைக் கரடிகள் அழிந்து போனமைக்கு மனிதன் தான் காரணம் என சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. உணவுக்காக அல்லாமல் கரடிகளின் வசிப்பிடமான குகைகளை ஆதி மனிதன் அபகரித்ததை தொடர்ந்து அந்தக் கரடிகள் மறைந்து விட்டதாக ஜெர்மனியில் இருக்கின்ற மேக்ஸ் பிளான்க் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிட்டதட்ட 500 கிலோ எடையுடன் இருந்த இந்த குகை கரடிகள் 25000 ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்து விட்டன. இதற்கு காரணம் ஆதி மனிதன் என இப்போது ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மனிதனின் ஜனத்தொகை பெருக பெருக, கரடிகள் அழியும் எண்ணிக்கையும் அதிகரித்ததாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
| | |
| ஐரோப்பிய குகைகளில் காணப்பட்ட உறையுக கரடியின் மண்டையோடு |
ஐரோப்பாவில் உள்ள பல குகைகளில் உறையுகத்து கரடிகளின் எலும்புகள் கிடைத்துள்ளன.
மனிதன் மட்டுமன்றி காலநிலை மாற்றங்களால் கரடிகளுக்கு சரியான உணவு பொருட்கள் கிடைக்காமல் போனதாலும் அவை மறைந்து இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
எனினும் குகைகளில் வாழ்ந்த கரடிகளை விரட்டி விட்டு அங்கே குடியமர்ந்து கொண்ட மனிதனால் தான் கரடிகளின் மறைவு உறுதியானதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
04.அணுகுண்டுப் பரிசோதனை தடை தினம்
| | |
| அணுகுண்டு புகை மண்டலம் |
அணுகுண்டுப் பரிசோதனைக்கு எதிரான முதலாவது சர்வதேச தினத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகஸ்ட் 29 ஆம் திகதி அனுஷ்டிக்கின்றது.
பல தசாப்தங்களாக நடத்தப்பட்டுள்ள அணுகுண்டுப் பரிசோதனைகள் மூலம் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் விளைவிக்கப்பட்டுள்ள கெடுதல்கள் குறித்த கவனத்தை ஈர்க்கும் நோக்குடனும் பரிசோதனைத் தடைக்கான பரந்துபட்ட உடன்படிக்கைக்கு ஆதரவை ஊக்குவிக்கும் பொருட்டும் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான முயற்சிகளைத் துரிதப்படுத்தும் பிரசாரத்திற்கு இந்த நிகழ்வு மேலும் உந்துசக்தியாக அமையும் என ஐநா தலைமைச் செயலர் பான் கீ மூன் நம்புகின்றார்.
சோவியத் யூனியனின் முதலாவது அணு குண்டு பரிசோதனை நிலையமாக பயன்படுத்தப்பட்டுவந்த மத்திய ஆசியாவிலுள்ள குடியரசான கஸக்ஸ்தானே, 61 ஆண்டுகளுக்கு முன்னர், அணுகுண்டுப் பரிசோதனைக்கான இந்த உலகளாவிய தினத்தை முன்மொழிந்தது.
இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட சுமார் 456 பரிசோதனைகள் காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் அளவு மட்டும் ஜெர்மன் நாட்டின் மொத்த பரப்புக்கு சமமானது.
அங்கு சுமார் ஒன்றரை மில்லியன் மக்கள் உயிர் மற்றும் சுகாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச உடன்படிக்கை முயற்சியில் தடைகள்
1950ம் ஆண்டு முதல் 20ம் நூற்றாண்டின் இறுதிவரை ஆஸ்திரேலியா முதற்கொண்டு பசுபிக் தீவுகள் மற்றும் அமெரிக்காவிலுள்ள நெவாடா வரையுமான பிரதேசங்களில் தரைக்கு மேலும் தரைக்கடியிலும் கடலுக்கடியிலும் என ஆயிரக்கணக்கான அணுகுண்டுகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
| | |
| கஸக்ஸ்தான் எல்லை வரைபடம் |
இஸ்ரேல், இரான் மற்றும் வடகொரியா உள்ளிட்ட நாடுகள் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றமை அந்த உடன்படிக்கை அமலுக்கு வருவதில் பெரும் தடையாக இருந்து வருகின்றது.
அணு ஆயுதங்களைக் களைவதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதெல்லாம் இந்த நாடுகளே பல ஆண்டுகளாக அந்த முயற்சிகளுக்கு தடைக்கற்களாக இருந்து வருகின்றன.
தனது முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக அணு ஆயுதக் களைவை வலியுறுத்திவரும் ஐநாவின் தலைமைச் செயலர் பான் கீ மூன், பரிசோதனைத் தடை உடன்படிக்கையை 2012ஆம் ஆண்டளவில் அமுலுக்குக் கொண்டுவர முயற்சிக்கின்றார்.
இதன்பொருட்டு ஐநாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அணு ஆயுதக்களைவு உச்சி மாநாடு ஒன்றுக்காக உடன்படிக்கையின் உறுப்பு நாடுகளுக்கு பான் கீ மூன் அழைப்பு விடுத்துள்ளார். 05.6 மாதங்கள் வரை விண்வெளிக்கு போய் வந்தால் 80 வயது பலவீனம் ஏற்படும்
விண்வெளியில் 6 மாதங்கள் வரை தங்கி விட்டு வரும் வீரர்கள், தரையை தொட்டதும் 80 வயது முதியவரின் பலவீனத்தை உணர்வதாக அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.
விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளின் உடல்நலன் குறித்து பீதி கிளப்பியுள்ள இந்த ஆய்வை புளோரிடாவை சேர்ந்த மார்கெட் பல்கலை க்கழகம் நடத்தியது.
இதுபற்றி அதன் பேராசிரியர் ராபர்ட் பிட்ஸ் கூறியதாவது:
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் 6 மாதங்கள் வரை தங்கி விட்டு பூமிக்கு திரும்பும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
விண்வெளிக்கு செல்வதற்கு முன்பும், பூமியை தொட்ட உடனேயும் பயாப்சி முறையில் அவர்களது ஆடுசதை (முழங்கால் பின் சதை) பரிசோதிக்கப்பட்டது. விண்வெளியில் 6 மாதம் தங்கிவிட்டு பூமிக்கு திரும்பும் வீரர்களின் ஆடுசதையி ன் தசை நார்களில் 40 சதவீத சக்தி குறைந்திரு க்கிறது.
இது பழைய நிலைக்கு திரும்ப ஓரிரு மாதங்கள் ஆகிறது. மனிதனின் பாலன்ஸ், உடல் தோரணை (பாஸ்ச்சர்) ஆகியவற்றை இந்த தசைதான் தீர்மானிக்கிறது.
எனவே, வீரர்கள் பூமிக்கு திரும்பியதும் 80 வயது முதியவரின் உடல் திறன், தோரணையுடன்தான் இருக்கின்றனர். இது தற்காலிகம்தான் என்றாலும் விஞ்ஞானிகள் உடல் நிலை குறித்து கவலை அளிப்பதாகும் என்றார்.
விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளின் உடல்நலன் குறித்து பீதி கிளப்பியுள்ள இந்த ஆய்வை புளோரிடாவை சேர்ந்த மார்கெட் பல்கலை க்கழகம் நடத்தியது.
இதுபற்றி அதன் பேராசிரியர் ராபர்ட் பிட்ஸ் கூறியதாவது:
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் 6 மாதங்கள் வரை தங்கி விட்டு பூமிக்கு திரும்பும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
விண்வெளிக்கு செல்வதற்கு முன்பும், பூமியை தொட்ட உடனேயும் பயாப்சி முறையில் அவர்களது ஆடுசதை (முழங்கால் பின் சதை) பரிசோதிக்கப்பட்டது. விண்வெளியில் 6 மாதம் தங்கிவிட்டு பூமிக்கு திரும்பும் வீரர்களின் ஆடுசதையி ன் தசை நார்களில் 40 சதவீத சக்தி குறைந்திரு க்கிறது.
இது பழைய நிலைக்கு திரும்ப ஓரிரு மாதங்கள் ஆகிறது. மனிதனின் பாலன்ஸ், உடல் தோரணை (பாஸ்ச்சர்) ஆகியவற்றை இந்த தசைதான் தீர்மானிக்கிறது.
எனவே, வீரர்கள் பூமிக்கு திரும்பியதும் 80 வயது முதியவரின் உடல் திறன், தோரணையுடன்தான் இருக்கின்றனர். இது தற்காலிகம்தான் என்றாலும் விஞ்ஞானிகள் உடல் நிலை குறித்து கவலை அளிப்பதாகும் என்றார்.
06.சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம்
ஜெனீவா : சூரியனை சுற்றியுள்ள வட்டப் பாதைக்கு வெளியே சூரியன் அளவுக்கு புதிய கிரகம் இருப்பதையும், இதுவரை இல்லாத மிகச் சிறிய கோள் உட்பட 7 புதிய கோள்களையும் சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுபற்றி ஜெனீவாவில் இரோப்பியன் சதர்ன் அப்சர்வேடரி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியதாவது: சூரிய சுற்றுப் பாதைக்கு வெளியே சூரியனைப் போன்ற, அதே அளவில் கிரகம் ஒன்று இருப்பது விண்வெளி ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அந்த புதிய கோளின் சுற்று பாதையில் 7 கிரகங்கள் உள்ளன. அதில் ஒரு கிரகம் மிகச் சிறியது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் மிகச் சிறியதான அது விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியம் அளித்துள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகங்களில் பெரும்பாலானவை பூமியை விட 13 முதல் 25 மடங்கு பெரியவை. ஒரே ஒரு கிரகம் மட்டுமே பூமியைப் போல 1.4 மடங்கு உள்ளது. பூமியை தவிர்த்து சூரிய மண்டலத்திலும், அதற்கு வெளியிலும் உள்ள கோள்களில் இதுவே மிகச் சிறியது என கருதப்படுகிறது. ‘‘புதிய கிரகங்கள் அனைத்தும் பாறைகள், பனிக்கட்டிகளால் ஆனவை. அவை உறுதியானவை. அதன் மேற்பகுதியில் ஹைட்ரஜன், ஹீலியம் வாயு இருக்கலாம். இந்த கிரகங்களில் உயிரினம் வசிக்க வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை’’ என்று ஒரு விஞ்ஞானி தெரிவித்தார்.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகங்களில் பெரும்பாலானவை பூமியை விட 13 முதல் 25 மடங்கு பெரியவை. ஒரே ஒரு கிரகம் மட்டுமே பூமியைப் போல 1.4 மடங்கு உள்ளது. பூமியை தவிர்த்து சூரிய மண்டலத்திலும், அதற்கு வெளியிலும் உள்ள கோள்களில் இதுவே மிகச் சிறியது என கருதப்படுகிறது. ‘‘புதிய கிரகங்கள் அனைத்தும் பாறைகள், பனிக்கட்டிகளால் ஆனவை. அவை உறுதியானவை. அதன் மேற்பகுதியில் ஹைட்ரஜன், ஹீலியம் வாயு இருக்கலாம். இந்த கிரகங்களில் உயிரினம் வசிக்க வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை’’ என்று ஒரு விஞ்ஞானி தெரிவித்தார்.
07.விண்ணில் கிரகங்கள் மோதிக்கொள்ளும் வாய்ப்பு
விண்ணில் அருகருகே சுற்றிக்கொண்டிருக்கும் ஆர்.எஸ் கேனம் வெனடிகோரம் என்ற இரண்டு நட்சத்திரங்களை சுற்றிவரும் இரண்டு கிரகங்கள் விரைவில் மோதும் அபாயம் உள்ளதை விளக்கும் கிராபிக்ஸ் படம்தான் இது. கிரகங்கள் மோதி, விண்வெளியில் தூசு மண்டலம் ஏற்படுவது சகஜம் என்பதை நாசாவின் ஸ்பிட்சர் டெலஸ்கோப் ஆதாரங்களுடன் படம்பிடித்துள்ளது. இது போன்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ காற்று, தண்ணீர் போன்றவை இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதால், அதிகநாள் இங்கு மனிதன் வாழ முடியாது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
08.ஆசியாவின் சிறந்த நாடு இலங்கை
பிரிட்டிஷ் ஆய்வில் உலகில் 8வது இடம்
தியாகமனப்பான்மையுடன் தான உணர்வும் புன்னகையும் கொண்ட மக்கள் வாழும் உலக நாடுகளில் இலங்கை எட்டாவது இடத்தில் உள்ளது.
Charities aid foundation என்ற பிரிட்டிஷ் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இருந்து இது தெரியவந்து ள்ளது.
தியாக மனப்பான்மையுடன் கூடிய மக்கள் வசிக்கும் உலக நாடுகளில் எட்டாம் இடத்தில் உள்ள இலங்கை ஆசிய நாடுகளிடையே முதலாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியலில் உலகில் முதல் 18 இடங்களை பிடித்துள்ள நாடுகளின் பட்டியல் வருமாறு,
1. அவுஸ்திரேலியா, 1. நியூசிலாந்து 3. அயர்லாந்து, 3. கனடா, 5. சுவிட்ச ர்லாந்து, 5. அமெரிக்கா, 7. நெதர்லாந்து, 8. பிரிட்டன், 8. இலங்கை, 10. ஆஸ்திரியா, 11. லாகோஸ், 11. சியராலியோன், 13. மோல்டா, 14. ஐஸ்லாந்து, 14. துர்க்மெனிஸ்தான், 16. கயானா , 16. கட்டார், 18. ஹொங்கொங், 18. ஜெர்மனி, 18. டென்மார்க், 18. கினி. (ரு - ஈ)
09.ஜிமெயில் 'ப்ரயோரட்டி இன்பொக்ஸ்' (காணொளி இணைப்பு)
கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் (Gmail) என்பது பிரபல மின்னஞ்சல் சேவை. பல்வேறு நவீன வசதிகளை தமது பாவனையாளர்களுக்கு கூகுள் வழங்கி வருகிறது.
தற்போது கூகுள் தனது ஜிமெயில் பாவனையாளர்களுக்குப் புதியதொரு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இவ்வசதியானது ' ப்ரயோரட்டி இன்பொக்ஸ்' என அழைக்கப்படுகின்றது.
இது பாவனையாளர் ஒருவர் பெற்றுக் கொள்ளும் மின்னஞ்சல்களை அதன் முக்கியத்துவ அடிப்படையில் வேறுபடுத்துவதாகும்..
இதன் போது பாவனையாளரின் இன்பொக்ஸ் 3 பிரிவுகளாக பிரிக்கப்படும்.
முக்கியமான மின்னஞ்சல்கள் 'இம்போர்ட்டன்ட் அண்ட் அன்ரெட்' பிரிவுக்குள் உள்ளடக்கப்படும். மற்றைய மின்னஞ்சல்கள் அடுத்தடுத்த பிரிவுகளுக்குள் சேர்க்கப்படும்.
இம்மின்னஞ்சல்களை வேறுபடுத்துவதற்காக ஜிமெயில் சில விசேட சமிக்ஞைகளை உபயோகப்படுத்துகின்றது.
நாம் அதிகமாக எவரிடமிருந்து மின்னஞ்சல்களினை பெறுகின்றோம் மற்றும் பதிலளிக்கின்றோம் என்பதை அடிப்படையாகக் கொண்டு இத்தொழிற்பாடு நடைபெறுகின்றது.
மேலும் மின்னஞ்சல் கணக்கில் காணப்படும் '+' பட்டன் மூலம் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களையும் ' - ' பட்டன் மூலம் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தவற்றையும் குறிப்பிட்டுக் கொள்வதன் மூலமும் மின்னஞ்சல்களை வேறுபடுத்திக் கொள்ளலாம்.
கூகுள் நிறுவனமானது கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாகத் தனது ஜிமெயில் பாவனையாளருக்கு அறிமுகப்படுத்திவரும் 3ஆவது நவீன வசதி இதுவாகும்.
தொடர்புகளை நிர்வகிக்கும் ( கொன்டாக்ட் வசதி) வசதி, அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதி என்பனவே அவையாகும்.
10.மனதை அறியும் நவீன இயந்திரம்!
மனித எண்ணங்களை வார்த்தையாக மாற்றக்கூடிய புதிய இயந்திரத்தை உட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது.
மேற்படி இயந்திரமானது மனித மூளையின் சமிக்ஞைகளை வார்த்தைகளாக மாற்றக்கூடியது.
இது விஞ்ஞான உலகில் புதிய மைல் கல்லெனவும் இதன் செயற்பாடுகள் 90% சரியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ் இயந்திரத்தின் சென்சர்கள் மண்டையோட்டின் கீழ் பகுதியில் அதாவது மூளையின் மேற்பரப்பில் இணைக்கப்பட்டிருக்கும்.
இதன் மூலம் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுப் பேச முடியாதவர்களின் எண்ண ஓட்டத்தினை அறிந்து கொள்ள முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.
இது முன்னைய கண்டுபிடிப்புக்களை விட அதிநவீனமானதெனத் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment