Top 10 அறிவியல் News in this Week
01.பூச்சிகள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள 5வது அறிவை தீட்டிக்கொள்கின்றன!
தாவரங்களை நம்பியுள்ள சிறு பூச்சிகள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள 5வது அறிவை தீட்டிக்கொள்வது தெரியவந்துள்ளது. இத்தகைய பூச்சிகளுக்கு இயற்கையிலேயே மோப்ப சக்தி அதிகம். இதனால் பாலூட்டிகள் போன்ற இதர விலங்குகள் தங்கள் உணவுக்காக தாவரங்களை நாடி வரும் போது, அதை இருப்பிடமாகக் கொண்டுள்ள பூச்சிகள் தங்கள் மோப்ப சக்தியால் அதை முதலிலேயே அறிந்து கொள்ளும்.
எனவே உயிர் பிழைக்கும் நோக்கில் அவை தாவரங்களில் இருந்து தரையில் விழுந்து விடுகின்றன. விலங்குகள் சென்ற பின் அந்தப் பூச்சிகள் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்புவதும் தெரியவந்துள்ளது. ஒரு சில விநாடிகள் அசட்டையாக இருந்தாலும் விலங்குகளுக்கு பூச்சிகள் உணவாகிவிடும் என்பதால் இயற்கையிலேயே அந்த பூச்சிகளுக்கு எச்சரிக்கை உணர்வு உள்ளது தெரியவந்துள்ளது.
இஸ்ரேலில் உள்ள ஹைபா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தாவரங்களும், பூச்சிகளும் குறித்து நடத்திய ஆய்வுத் தகவல் ‘நடைமுறை உயிரியல் என்ற அறிவியல் இதழில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
|
உலகில் முதலாவது முப்பரிமாண கெமரா மற்றும் அச்சிடுதல் முறை இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பியூஜி பிலிம்ஸின் (Fujifilm) புதிய முப்பரிமாண முயற்சியாக இது அமைந்துள்ளது.
இந்தக் கெமரா மூலம் எடுக்கப்படும் புகைப்படத்தை உடனடியாக அல்பம் வடிவில் பார்க்க முடியும். இதில் காணப்படும் நவீன தொழில்நுட்பத்துடனான லென்ஸ் மனித கண்களின் பார்வை தூரத்தை விட மேலானது.
இது லெண்டிக்யூலர் (lenticular) தொழில்நுட்பம் என அழைக்கப்படுகிறது. இவ்வகையான தொழில்நுட்பம் 1940 களில் பாவிக்கப்பட்டாலும் பின்னர் நவீனப்படுத்தப்பட்டு தற்பொழுது முப்பரிமாண முறையில் அறிமுகமாகிறது.
04.இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் பூண்டு!
பூண்டு சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்த முடியும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் அடிலெய்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. பச்சை பூண்டு, சமைக்கப்பட்ட பூண்டு மற்றும் பூண்டு பொடி ஆகியவற்றை சாப்பிடுவதை விட பூண்டுச் சாறை சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்துவதில் முழுப் பயன் இருக்கும்.
12 வாரங்களாக, ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் 50 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரத்த நாளங்களை ஆசுவாசப்படுத்தும் நைட்ரிக் அமிலம் மற்றும் ஹைட்ரஜன் சல்ஃபைடு பூண்டில் இருப்பதால் ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்த முடிகிறது என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
05.அதிகரித்து வரும் உலக வெப்பம் பயிர்களையும் பாதிக்கும் அபாயம்!
அதிகரித்து வரும் உலக வெப்பம், மனிதர்கள், விலங்குகளை மட்டுமல்லாது பயிர்களையும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அடுத்த சில ஆண்டுகளில், ஆசிய நாடுகளில் பெரும்பாலான மக்களின் உணவாக பயன்படும் அரிசி உற்பத்தி கடுமையாக பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (எப்.ஏ.ஓ.இ) ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து, கடந்த 1994ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை சீனா, இந்தியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகளில் உள்ள நெல் பயிரிடும் 227 இடங்களின் அதிகபட்ச, குறைந்த பட்ச வெப்ப நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.இதில், புவி வெப்பம் அதிகரித்து வருவதால் நெல் உற்பத்தி பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வு குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர் ஜர்ரோட் வெல்ச் கூறியதாவது: தினசரி நிலவும் குறைந்தபட்ச இரவு நேர வெப்ப நிலை அதிகரிப்பால், நெல் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படுகிறது. பகலில் காணப்படும் அதிகபட்ச வெயில் நெற்பயிர் வளர்ச்சிக்கு பெருமளவு உதவுகிறது.ஆனால், இரவில் காணப்படும் அதிகபட்ச வெப்பத்தால் நெற்பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, நெல் மணிகளின் எடை குறைந்து விடுகிறது. உலக வெப்பம் அதிகரித்து வரு வதன் காரணமாக, கடந்த 25 ஆண்டுகளில் நெற்பயிர் உற்பத்தி ஏற்கனவே 10 முதல் 20 சதவீதம் வரை குறைந்து விட்டது. இவ்வாறு தொடர்ந்து வெப்பம் அதிகரிப்பால் இந்த நூற்றாண்டின் மத்தியில் நெல் உற்பத்தி மிக மோசமாக பாதிக்கப்படும்.தற்போது பகல் நேரத்தில் காணப்படும் மிக அதிகபட்ச வெப்பம் கூட நெல் உற்பத்தியை பாதிக்கும் என்பதால் இழப்பு அதிகமாக இருக்கும்.
உலகில் உள்ளவர்களில் 300 கோடி மக்களின் தினசரி உணவாக அரிசி உள்ளது.ஆசியாவில் உள்ள 100 கோடி அரிசி சாப்பிடும் ஏழை மக்களில், 60 கோடி மக்களுக்கே தற்போது அரிசி கிடைக்கிறது. நெல் உற்பத்தியில் ஏற்படும் வீழ்ச்சி, அதிகளவு மக்கள் ஏழ்மை நிலைக்கு மாற்றி விடும்.எனவே, நெல் உற்பத்தி முறையை மாற்ற வேண்டும் அல்லது அதிக வெப்ப நிலையை தாங்கி வளரும் நெற்பயிர் ரகத்தை உருவாக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்து வரும் 20 அல்லது 30 ஆண்டுகளில் நெல் உற்பத்தியில் பெருமளவில் நஷ்டம் ஏற்படும்.இவ்வாறு ஜர்ரோட் வெல்ச் கூறியுள்ளார்.
06.என்சிலூடஸ் துணை கோளில் தண்ணீர் ஆதாரம்
லண்டன்: விண்வெளி ஆராய்ச்சிக்காக செலுத்தப்பட்ட காசினி விண்கலம், நூற்றுக்கணக்கான படங்களை பூமிக்கு அனுப்புகிறது. சூரிய குடும்பத்தில் உள்ள ‘என்சிலூடஸ் துணை கோளை, காசினி விண்கலம் சுமார் 6,17,000 மைல் தூரத்தில் பயணித்த போது, எடுத்த படத்தை டாக்டர். ப்ராங்க் போஸ்ட்பெர்க்விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். இதில் என்சிலூடசில் உப்புநீர் பனிப்பாறைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் அங்கு ஏரிகள், நீர்தேக்கங்கள், மற்றும் கடல்கள் இருந்திருக்க கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளும் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்த ஆராய்ச்சி மேலும் தொடர்ந்து நடைபெறுகிறது. சூரிய மண்டலத்தில் உள்ள 3 துணை கோள்களில் என்சிலூடசும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
07.கிச்சுகிச்சு மூட்டும் ரோபோ
லண்டன்: விதவிதமான வசதிகளுடனும், புதிய புதிய டெக்னாலஜியுடனும் ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இப்போது ஜோக் சொல்லும் புதிய ரோபோவை கண்டுபிடித்திருக்கிறார் பிரிட்டிஷ் பொம்மை தயாரிப்பாளர் டோனி எல்லீஸ். இந்த சூப்பர் ஸ்மார்ட் ரோபோ இன்டர்நெட்டிலிருந்து ஜோக்குகளை படித்து நம்மிடம் சொல்லி சிரிக்க வைக்கும். மேலும் ‘கராக்கி’ எனும் மியுசிக் வீடியோ கேம்ஸ்சும் இந்த ரோபோ விளையாடுமாம்.
‘ஏஐஎம்இசி என்ற இந்த ரோபோ வெறும் பொம்மையல்ல, எனது க்ளோஸ் ப்ரண்ட்’ என்கிறார் எல்லீஸ். அவர் மேலும் கூறும்போது, “இந்த ரோபோ நமது முகத்தையும், குரலையும் வைத்தே நாம் யார் என்பதை கண்டுபிடித்து விடும். நமது விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப இன்பர்மேஷன்களையும், நமக்கு பிடித்த ஜோக்குகளையும் இன்டர்நெட்டிலிருந்து எடுத்து சொல்லி நம்மை அசத்திவிடும். இந்த ஏஐஎம்இசி ரோபோ நொடிப்பொழுதில் இன்பர்மேஷன்களை சேகரித்து உரிமையாளருக்கு தந்துவிடுகிறது. இதை அயல்நாட்டு மொழிகளை கற்பிக்கவும் பயன்படுத்தலாம்’’ என்கிறார் எல்லீஸ்.
08.நிலா சுருங்குகிறது : ஆராய்ச்சியாளர்கள் புது தகவல்
வாஷிங்டன் : சமீப காலமாக நிலவில் அதிக வெடிப்புகள் தோன்றியிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்புகள் நிலா சுருங்குவதனாலே ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறிவருகின்றனர். அளவுக்கதிகமான குளிரின் காரணமாகவே நிலா சுருங்குவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. செயற்கை கோள்களின் முலமாக எடுக்கப்பட்ட படங்களை வைத்துப் பார்க்கும் போது 100 மீட்டர் அளவுக்கு நிலா சுருங்கியிருப்பதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது போன்ற வெடிப்புகள் முதன்முறையாக 1970ம் ஆண்டு அப்பல்லோ விண்கலம் அனுப்பிய படங்களின் முலம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தற்போது இது போன்ற 14க்கும் அதிகமான வெடிப்புகள் தோன்றியிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் புது தகவலை கூறியுள்ளனர். இந்த 100 மீட்டர் அளவு சுருக்கம் கடந்த 1 பில்லியன் வருடத்திற்குள்ளாகவே நடந்திருக்கக்கூடும் என ஆராய்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிப்புகளுக்க காரணம் நிலாவில் உள்ள பாறைகள் அதிக குளிரினால் சுருங்கி ஒன்றுடன் ஒன்று மோதுவதனாலே ஏற்பட்டதாக ஆராய்சியில் கூறப்பட்டுள்ளது.
09. ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க
வாஷிங்டன்: புகைப் பழக்கம் மற்றும் அதில் இருந்து விடுபடும் வழிமுறைகள் குறித்து அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். தினமும் பல பாக்கெட்களை காலி பண்ணும் 21 பேரை வைத்து ஆய்வு நடந்தது. பல கட்டமாக அவர்களிடம் பல்வேறு சோதனைகள் நடந்தன. அவர்களது மூளையின் செயல்பாடும் தொடர்ந்து கண்காணிப்பட்டு வந்தது.
‘இப்ப ஒரு தம் போடலாமா’ என்று மூளை யோசிக்கிற நேரத்திலும், ‘இப்ப வேணாம்பா’ என்று சிகரெட்டை மூளை மறுக்கிற நேரத்திலும் அதன் செயல்களில் ஏற்படும் மாற்றம் குறித்து கண்காணிக்கப்பட்டது. பழம், சிகரெட் போன்ற பொருட்களின் படத்தை அவர்களிடம் காட்டி அவற்றின் நினைவு வரச் செய்தனர். அப்போது மூளையில் ஏற்படும் மாற்றத்தையும் கண்காணித்தனர்.
பின்னர், சிகரெட்டால் ஏற்படும் தீமை குறித்து அவர்களிடம் விளக்கப்பட்டது. சிகரெட் புகைப்பதால் அவர்கள் அடைந்த சின்னச் சின்ன அவதிகளில் இருந்து பெரிய பாதிப்புகள் வரையிலான சம்பவங்களை நினைவுகூருமாறு கூறப்பட்டது. அதை அவர்கள் யோசித்த நேரத்திலும் மூளையில் ஏற்பட்ட மாற்றங்கள் எப்எம்ஆர்ஐ கருவியின் உதவியுடன் கண்காணிக்கப்பட்டது.
புகை பாதிப்புகளைப் பற்றி மூளை சிந்தித்த பிறகு, அவர்களிடம் கணிசமான மாற்றம் தெரிந்தது. சிகரெட் பழக்கத்தை விடுவதற்கும் பலர் முடிவெடுத்திருந்தனர். ‘சிகரெட் வேண்டாம். ஆபத்து’ என்று மூளைக்கு புரியவைத்தால் அந்த பழக்கத்தில் இருந்து எளிதில் விடுபட முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
10. நேற்று... பன்றிக்காய்ச்சல் இன்று...சூப்பர் பக், நாளை...?
ஹாச்...ஹாச் என்று அறையே அதிரும் வகையில் தும்மாதவர் எத்தனை பேர்?
பழங்களை சுத்தம் செய்யாமல் அப்படியே கடித்து சாப்பிடாதவர் உண்டா?
சாப்பிடும் முன் கையை சுத்தம் செய்பவர் தானா நீங்கள்?
காலுறையை அணிந்தபின் கையை சுத்தம் செய்யாமல் அப்படியே ஆபீஸ்
கிளம்புவோர் இல்லையா என்ன?
சிந்தனையில் மூழ்கி விட்டால் போதும், கைநகங்கள் காணாமல் போகும். அப்படியே
மூக்கை துழாவி, பிஸ்கட்டையும் சுவைப்பது உண்டா இல்லையா?
இப்படி எல்லாம் செய்வதால் என்ன ஆகிறது என்று எத்தனை பேருக்கு விழிப்புணர்வு
இருக்கிறது.
இந்த வகையில்...
நேற்று...பறவைக்காய்ச்சல், இன்று...சூப்பர் பக், நாளை...?
அலெக்சாண்டர் பிளெமிங் - 82 ஆண்டுக்கு முன் இவர் பென்சிலின் என்ற உன்னதமான
மருந்தை கண்டுபிடித்தார். உடலில் பாக்டீரியா தொற்றுவதால் ஏற்படக்கூடிய
கோளாறுகளை தடுக்கும் வல்லமை படைத்த முதல் ஆன்டிபயாடிக் மருந்து இது தான்.
அதன் பின் தான், பல்லாயிரக்கணக்கான விஞ்ஞானிகள், ஏகப்பட்ட ஆன்டிபயாடிக்
மருந்துகளை கண்டுபிடித்து சந்தையில் குவித்தனர். எந்த ஆன்டிபயாடிக் மருந்துகள்
நல்லது செய்வதாக நாம் நினைத்தோமோ, அந்த மருந்துகள் தான் ஆபத்தானதாக உருவெடுத்துள்ளன.
அறுபதாண்டுகளில் வயிற்று வலி முதல் மூளை பாதிப்பு வரை உள்ள பல கோளாறுகளை தீர்க்க பல ஆன்டிபயாடிக் மருந்துகள் வந்து விட்டன. ஆனால்,
ஆன்டிபயாடிக் மருந்துக்கும் கட்டுப்படாமல் பல தொற்றுக்கிருமிகள் உள்ளன என்பதை 16 ஆண்டுக்கு முன்பே கண்டுபிடித்து விட்டனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.
‘சூப்பர் பக்’ கிருமிக்கு அண்ணன்களை கடந்த 16 ஆண்டுகளில் அமெரிக்க, பிரிட்டன், ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்தபடி தான் உள்ளனர். 1992 ல் , முதன் முறையாக அமெரிக்காவில் ராக்பெல்லர் பல்கலைக்கழக மைக்ரோபயாலஜிஸ்ட் அலெக்சாண்டர் டோமஸ்,‘ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கே கட்டுப்படாத பல பாக்டீரியா
கிருமிகள் உள்ளன’ என்று பட்டியலிட்டிருந்தார்.
இப்படி 16 ஆண்டாக நீடித்த சூப்பர் பக் சர்ச்சை இப்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது.
இந்த சூப்பர் பக் கிருமிக்கு புதுடெல்லி கிருமி என்றும் பிரிட்டன் லொள்ளு விஞ்ஞானிகள் பெயர் வைத்து விட்டனர்.
இந்தியாவில் சிகிச்சை பெற்று திரும்பிய வெளிநாட்டவர் சிலருக்கு சூப்பர் பக் தொற்றியுள்ளது என்று கூறப்பட்டாலும், உண்மையில் அவர்களை தொற்றியது
‘ஸ்டபிலோகோகஸ் ஆரஸ்’ பாக்டீரியா என்ற கிருமி தான்.
உலகம் முழுவதும், மனிதன், பிராணிகள், விலங்குகள் மூலமாக பரவி உள்ள 3 ஆயிரம் பாக்டீரியா தொகுப்புகளில் ஒன்று தான் இது. அப்படியிருக்க, இந்தியாவில் இருந்து தான் ஆரம்பித்தது என்று கூறியிருப்பது ‘முட்டாள் தனம்’ என்று பல நாட்டு
விஞ்ஞானிகளும் ஒப்புக்கொண்டனர் என்பது திருப்தியளிக்கும் விஷயம்.
உலகின் டாப் டென் உயிர்பறிப்பு நோய்கள்
நோய் ஆண்டுபலி
சுவாசக்கோளாறுகள் 40 லட்சம்
எய்ட்ஸ் 30 லட்சம்
மலேரியா 50 லட்சம்
காசநோய் 20 லட்சம்
தட்டம்மை 5 லட்சம்
கக்குவான் இருமல் 3 லட்சம்
டெட்டனஸ் 2 லட்சம்
கழுத்துவீங்கி 1.7 லட்சம்
செக்ஸ் நோய் 1.5 லட்சம்
பேதி 2.2 லட்சம்
மூக்கு முதல் முதுகு வரை
கார்ப்பாபெனம் - இது ஆன்டிபயாடிக்குகளில் முக்கியமான ரசாயன கலவை; வெகு அரிதான சமயங்களில் டாக்டர்களால் நோயாளிக்கு அளிக்கப்படுவது. ஆனால், மருந்து கம்பெனிகளின் உபயத்தால், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மிக சுலபமாக எதற்கெடுத்தாலும் பயன்படுத்தப்படும் நிலை உருவாகி விட்டது.
சில முக்கிய அறுவை சிகிச்சைக்கு பின் நோயாளிக்கு அளிக்கப்படும் இந்த மருந்து, எதற்கெடுத்தாலும் அளிக்கப்படுவதால், உடலில் கிருமி எதிர்ப்பு சக்தி ஒரு கட்டத்தில் குறைந்து விடுகிறது. அதிலும், காஸ்மெடிக் என்று சொல்லப்படும் மூக்கு முதல் முதுகு வரை செய்து கொள்ளப்படும் அழகூட்டும் சிகிச்சைக்கு பின் இது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் காஸ்மெடிக் சிகிச்சை பெற்ற 37 பிரிட்டன் நோயாகளிடம் சூப்பர் பக் இருப்பதற்கு காரணம் இந்த கார்ப்பாபெனம் ஆன்டிபயாடிக் பயன்படுத்தப்பட்டது தான் என்று தான் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்தாண்டே கிளம்பிடுச்சில்ல...
சமீபகாலமாக கூப்பாடு போட்ட ‘சூப்பர் பக்’ கிருமி, முதலில், இந்தியா சென்று திரும்பிய ஒரு ஆஸ்திரேலியரை தொற்றியது என்று அந்த நாடு கூறியது.
அடுத்து, பிரிட்டன் தான் அதிக லபோதிபோ போட்டது. ‘எங்கள் நாட்டை சேர்ந்த 37 பேர் இந்தியாவுக்கு மருத்துவ சுற்றுலா சென்றனர். அவர்களுக்கு மருத்துவமனை சிகிச்சையின் போது தான் ‘சூப்பர் பக்’ தொற்றியது’ என்று அலறியது. ஆனால், கடந்தாண்டே, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஒரு பயணி, இந்தியா வந்தபோது அவருக்கு இந்த கிருமி தொற்றியது.
மும்பையை சேர்ந்த மருத்துவர்கள் அப்போதே, கிருமி தொற்றியது குறித்து தகவல் வெளியிட்டனர். அப்போதெல்லாம் இந்த சூப்பர் பக் கூப்பாடு ஆரம்பிக்கவில்லை.
ஆனால், பிரிட்டனில் இருந்து லான்செட் ஆராய்ச்சி இதழில் வெளிவந்ததும் தான் இதில் பரபரப்பு ஏற்பட்டது.
பிரிட்டன் நிபுணர்கள் தான் வீண் பழியை இந்தியா மீது தொடர்ந்து போட்டபடி இருந்தனர்.
போதாக்குறைக்கு இந்த கிருமிக்கு, ‘நியூடெல்லி மெடல்லோ லாக்டோமஸ்’ என்றும் பெயர் வைத்தனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர், காஸ்மெடிக் சர்ஜரி எனப்படும் உடலை அழகுபடுத்தும் சிகிச்சை செய்து கொண்டவர்கள்.
கையை கழுவுறீங்களா இல்லே...அடுத்த பக்...பக்
காலையில் எழுந்ததும் பெட் காபி; அடுத்து, பேப்பர் படித்துக்கொண்டே சிற்றுண்டி; அப்படியே டிவி ரிமோட்டுக்கு ஒரு தாவல். அதற்குள் ஏகப்பட்ட முறை ட்ரிங்...ட்ரிங்... இப்படி ஒரு சில மணி நேரத்துக்குள்ளேயே பல முறை பல பொருட்களை தொட்டு விடுகிறோம்.
இவற்றில் எல்லாம் கிருமிகள் இருக்கின்றன என்பது தெரியுமா?
இதுவரை வெளியில் தெரியாமல் நம்முள் பல பாக்டீரியாக்கள் வலம் வந்தன. இப்போது வியாபார போட்டி அதிகமாகி விட்டது. பயமுறுத்தினால் அடுத்தடுத்து ஆன்டிபயாடிக் மருந்துகள் விற்பனை ஆகும் என்பதால் சூப்பர் பக் பிரசாரம் தலைதூக்கி உள்ளது. இது ஒரு ஆரம்பம் தான்; அடுத்தடுத்து பக்...பக் வரத்தான் போகிறது.
கண்டபடி ஆன்டிபயாடிக் வேணாம்... கேளுங்க
ஒரு தும்மல் போட்டால் போதும், அடுத்த நிமிடம் மருந்துக்கடையில் தான் சிலர் நிற்பர். வீடு திரும்பும் போது ஒரு ஆன்டிபயாடிக் மருந்துடன் தான் வருவர். மருந்துகள் சாப்பிடுவதுடன் ஆன்டிபயாடிக் மருந்துகளை சாப்பிடுவது வெகு சகஜமாகி விட்டது.
அரைகுறை மருத்துவர்கள், எந்த மருந்து தந்தாலும் கூடவே, ஒரு ஆன்டிபயாடிக் எழுதி தந்து விடுவதுண்டு. அதில் எப்படியாவது குணமாகி விடும் என்ற நம்பிக்கை தான். ஆனால், உடலில் உள்ள பாக்டீரியா கிருமிகளை அழிக்க ஆன்டிபயாடிக்கை செயற்கையாக விழுங்கி, விழுங்கி கடைசியில் அதற்கு பலனே இல்லாமல் போய் விடுகிறது ஒரு கட்டத்தில்.
இதிலும் நம்மூருக்கு இப்படி ஒரு பெருமை
கார்த்திகேயன் குமாரசாமி; தமிழ்நாட்டை சேர்ந்தவர். ஏ.எல்.முதலியார் அடிப்படை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மாணவர். இவரும், பிரிட்டனை சேர்ந்த திமோதி வால்ஷ் என்ற விஞ்ஞானியும் சேர்ந்து தான் ‘சூப்பர் பக்’ தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரையை தயார் செய்தனர்.
ஆனால், அதை திருத்தி லான்செட் வெளியிட்டுள்ளது தான் இதில் கவனிக்கப்பட வேண்டியது. ‘சூப்பர் பக் என்று சொன்னாலும் சரி, நியூடெல்லி பாக்டீரியா என்று சொன்னாலும் சரி, எதற்கும் கவலைப்பட வேண்டாம்.
இந்த பாக்டீரியா ஒரு பெரிய விஷயமே இல்லை. பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பன்றிக்காய்ச்சல் வைரசை விட, இது ஒன்றும் ஆபத்தானது அல்ல’ என்றும் அடித்துக்கூறினார்.
ஆய்வு கட்டுரை வெளியானதும், மத்திய சுகாதார அமைச்சகம் கடும் கொதிப்படைந்தது.
‘எந்த ஆதாரமும் இல்லாமல், ஆவணங்களும் இல்லாமல் இப்படி பொதுவாக குற்றம்சாட்டுவது அழகல்ல; அதுவும் விஞ்ஞானிகள் இப்படி செய்வது வேதனையானது.
மற்ற நாடுகளில் எல்லாம் சோதனைகளை செய்த பின்னர், அதை ஒப்பிட்டுப்பார்த்துத்தானே ஒரு நாட்டை குற்றம் சாட்ட முடியும். அப்படியில்லாமல் எந்த ஆதாரமும் இல்லாமல் எப்படி சொல்லலாம்’ என்று அமைச்சகம் பதிலடி கொடுத்தது.
சிக்கனிலும் உண்டுங்க பாலிலும் இருக்குங்க
நீங்க கையேந்தி பவனில் சாப்பிடுபவரா...மெக்டனால்டு சமாச்சாரமா...வெட்டுங்க, வயது இருக்கில்ல. வயிற்றில் போனவுடன் என்னவாகிறது என்று தெரியுமா? கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவு தான் இந்த சூப்பர் பக்.
நோய் தாக்காத மனிதன், நோய் தாக்காத ஆடு, மாடு, கோழி, பன்றி இருக்க ஆன்டிபயாடிக் தேவைப்பட்டது. அப்படி எல்லாவற்றுக்கும் ஆன்டிபயாடிக் பயன்படுத்தப்படும் போது, மனிதர்களுக்கு மட்டுமல்ல, பிராணிகளுக்கும் கூட அது வேலை செய்யாமல் போய் விடுகிறது.
ஆடு, மாடு, கோழி மூலம் கிடைக்கும் மட்டன், சிக்கனில் இருந்து கூட, மனிதனுக்கு சூப்பர் பக் போன்ற பல பாக்டீரியாக்கள் பரவுகின்றன. இந்த உண்மை புரிந்தால் போதும். ஏன், மாடு மூலம் கிடைக்கும் பாலில் கூட பாக்டீரியா உள்ளது.
லட்சங்களில் உயிர் பறித்த கொடிய நோய்கள் இதுவரை
அன்டோனைன் பிளேக்:
ரோமாபுரி மன்னர் மார்கஸ் ஆன்டோனியஸ் ஆண்ட 165 &180 ல் பரவிய ஆட்கொல்லி நோய்; ஐந்து லட்சம் பேரை பலி வாங்கியது.
கிப்ரியன் பிளேக்:
இதுவும் ரோமாபுரி மன்னர்களின் 251 &270 இடைப்பட்ட ஆட்சிக் காலத்தில் பரவியது. ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பேரை பலி வாங்கியது. கிளாடியஸ் கோதிஸ் என்ற ரோம் மன்னரும் இதற்கு பலியானார். ரோமாபுரி எழுத்தாளர் கிப்ரியன் பெயர் இதற்கு வைக்கப்பட்டது.
ஜஸ்டினிசம் பிளேக்:
541 -542 இடைப்பட்ட காலத்தில் கிழக்கு ரோமாபுரி மன்னன் ஜஸ்டினியன் ஆட்சி செய்தார். அவர் காலத்தில் பரவிய இந்த பிளேக், உலகம் முழுக்க 7 கோடி பேரை விழுங்கி விட்டது.
பிளாக் டெத்: 1
348 -1350 இடைப்பட்ட காலத்தில் கிழக்கு ஆசியாவில் ஆரம்பித்து 10 கோடி பேரை அழித்த அசுர பிளேக். அதிகம் பேரை பலி வாங்கியதால் இந்த பெயர்.
இத்தாலி பிளேக்:
1629 -1631ல் வடக்கு இத்தாலியில் ஆரம்பித்த பிளேக். இத்தாலியில் ஒன்றரை லட்சம் பேரை பலி வாங்கியது.
செவிலி கிரேட் பிளேக்:
1647 -1652 ல் ஸ்பெயினில் தாக்கிய பிளேக் இது. 50 ஆயிரம் பேரை விழுங்கியது.
கிரேட் பிளேக் ஆப் லண்டன்:
1665 - 1666 ல் இங்கிலாந்தை பயமுறுத்திய பிளேக்; லண்டன் மக்கள் தொகை ஒரு லட்சம் பேரில் 20 சதவீதத்தை பலி வாங்கியது.
மார்செலிஸ் கிரேட் பிளேக்:
1720 ல் பரவிய ஐரோப்பிய பிளேக் தான். பிரான்சில் ஆரம்பித்தது. ஒரு லட்சம் பேரை கொன்றது.
சின்னம்மை:
1775 -1783ல் வட அமெரிக்கா, மெக்சிகோவில் பரவிய நோய்; ஒன்றரை லட்சம் பேரை சாகடித்தது.
மூன்றாவது பிளேக்:
சீனாவில் 1885 ல் பரவியதில் ஆசியாவில் ஒரு கோடி பேர் செத்தனர்.
ஸ்பானிஷ் ப்ளூ:
1918 ல், உலக மக்கள் தொகை 160 கோடி; அதில் மூன்றில் ஒரு பங்கு இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியாயினர். பன்றிக்காய்ச்சல் வைரஸ் போன்ற முதல் வைரஸ் தாக்குதல் இது தான்.
ஏஷியன் ப்ளூ:
1956 - 58 ல், சீனா, சிங்கப்பூரில் பரவிய வைரஸ் தாக்குதல். அமெரிக்கா வரை பரவியது. 40 லட்சம் பேர் பலியாயினர்.
ஹாங்காங் ப்ளூ:
1968 - 1969ல் ஹாங்காங்கில் இருந்து பரவிய வைரஸ் தாக்குதல். ஹாங்காங் மக்கள் தொகை 5 லட்சத்தில் 15 சதவீதம் பேரை பலி வாங்கியது.
எய்ட்ஸ்:
1981ல் ஆரம்பித்தது இன்று வரை நீடிக்கிறது. ஆப்ரிக்காவில் ஆரம்பித்து, உலகின் மக்கள் தொகையில் 12 சதவீதத்தை விழுங்கி விட்டது.
பன்றிக்காய்ச்சல்:
பறவைக்காய்ச்சலை தாண்டி பன்றிக்காய்ச்சல் இன்னும் நம்மை விடவில்லை. 122 நாடுகளில் பரவி உள்ள இதற்கு ஒரு லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.
No comments:
Post a Comment