பெண் சிசுக் கொலையை தடுக்க முயற்சி
மரங்கள் சூழ்ந்த கிராமம்
மரங்கள் சூழ்ந்த கிராமம்
இந்தியாவில், மிகவும் பின்னடைந்த மாநிலமாக கருதப்படும் பிஹாரில் உள்ள ஒரு கிராம மக்கள் பெண் குழுந்தைகளின் பிறப்பை கொண்டாடும் வகையில் ஆண்டாண்டுகாலமாக மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.
இதனால் கிராமம் முழுவதும் பச்சைப் பசேலென காட்சியளிப்பதுடன் பெற்றோருக்கு தேவையான சமயத்தில் வருவாயையும் கொடுப்பதாக உள்ளது.
பிகாரின் பகல்பூர் மாவட்டத்தில் உள்ள தர்ஹாடா கிராமத்தில் வசிப்பவர்களிடம் வித்தியசாமான ஒரு பழக்கம் இருக்கிறது. இங்கே பெண் குழந்தைகள் பிறந்தால் - பெற்றோர்கள் உடனடியாக பத்து மரக்கன்றுகளை நடுகின்றனர். இவற்றில் பெரும்பாலானவை மா மற்றும் லிச்சி மரக் கன்றுகள்.
காடு
இதனால் வெறும் 7 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் ஒரு லட்சம் மரங்கள் இருக்கின்றன. தொலைவில் இருந்து பார்த்தால் பச்சைப் பசேலென காடுபோல தோற்றமளிக்கிறது இந்த கிராமம்.
இந்த கிராமத்தை சேர்ந்த 19 வயதான நிக்கா குமாரிக்கு தற்போது திருமணம் நடக்கவுள்ளது. இவருக்காக நிச்சயம் செயப்பட்டுள்ள மாப்பிள்ளை தற்போது அரச பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இந்த திருணத்துக்காக நிக்கா குமாரியின் குடும்பத்தினரும் வரதட்சணை கொடுக்க வேண்டும்.
ஆனால் குமாரி பிறந்த போது தான் வைத்த மா மரக் கன்றுகள், கடந்த சில ஆண்டுகளாக கனிகளை தருவதாகவும், அதை விற்று கிடைத்த காசில் திருமணத்தை நடத்திவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் இவரின் தந்தை சுபாஷ் சிங்.
பல குடும்பங்கள் தங்களின் பெண்கள் பிறந்து போது நட்ட மரங்களில் இருந்து கிடைக்கும் வருவாயை தனியாக ஒரு வங்கிக் கணக்கை ஏற்படுத்தி அதில் சேமிக்கின்றனர். பெண் குழந்தைகள் - பிறந்தவுடன் மரக் கன்றுகளை நடும் வழக்கம் தலைமுறை தலைமுறைக இந்த கிராமத்தில் இருப்பதாக கூறும் பள்ளி ஆசிரியரான சுஹேந்து குமார் சிங் கூறுகின்றார்.
இவரது உறவினர் ஒருவர் மகள் பிறந்தை முன்னிட்டு 30 கன்றுகளை நட்டுள்ளார். இந்த பழக்கத்தின் மூலம் பெண் சிசிக் கொலைப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதுடன் உலகம் வெப்பமடையும் பிரச்சனைக்கும், வரதட்சணை பிரச்சனைக்கும் தீர்வு ஏற்படுகிறது என்கிறார் குமார். இந்த கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஒரு பெண் சிசி கொலை கூட நடந்ததில்லை என்கிறார் அவர்.
பழம்தரும் மரங்கள் மூலம் நல்லவருவாய் கிடைப்பதால் மற்ற கிராமங்களைப் போல இங்கேயுள்ளவர்கள் பயிர் செய்வது குறைந்துள்ளது.
No comments:
Post a Comment